/indian-express-tamil/media/media_files/r2z1vxPGRybvaCBCHrNh.jpg)
சிலம்பத்தில் உலக சாதனை படைத்த கோவை சிறுமி அகல்யாவுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
coimbatore:கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல்ராஜ் மற்றும் இசைவாணி தம்பதியர் இவர்களுக்கு ஏழு வயதான அஹல்யா என்ற ஒரு மகள் உள்ளார். இவர் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறுமி அகல்யா கடந்த இரண்டு ஆண்டுகளாக சிலம்பம் கற்று வருகிறார். இந்த இரண்டு வருடத்தில் சிலம்பம் சுற்றி இந்தியாஸ் வேர்ல்ட் ரெக்கார்ட், இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், வேர்ல்ட் வைட் ரெக்கார்ட், ஐன்ஸ்டீன் வேர்ல்ட் ரெக்கார்ட் என்ற 4 உலக சாதனையை செய்துள்ளார்.
இந்நிலையில், தஞ்சாவூரில் நடைபெற்ற லின்கன் வேர்ல்ட் ரெக்கார்ட் நிகழ்வில் கலந்து கொண்ட சிறுமி அஹல்யா ஒரு நிமிடத்தில் 100 முறை கண்களை கட்டி பல்வேறு மச்சாசனம், சக்ராசனம், ஹாலசனம் ஆகிய யோகாசனங்கள் செய்து கொண்டே சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனை செய்துள்ளார். இந்த சாதனையை லிங்கன் வேர்ல்டு ரெக்கார்ட் புத்தகம் அங்கீகரித்துள்ளது இதற்கான சான்றிதழை தஞ்சாவூர் மேயர் ராமநாதன் சிறுமி அகல்யாவுக்கு வழங்கினார்.
இது குறித்து சிறுமி அஹல்யா கூறியதாவது:-
நாம் எந்த ஒரு விஷயம் செய்தாலும் அதை முழு கவனத்தோடு செய்ய வேண்டும் என்று எனது சிலம்ப பயிற்சியாளர் கூறுவது போல் அதன்படி சிலம்பத்தை நான் முழு கவனத்துடன் கற்றுக் கொண்டேன். எனக்கு சிலம்பம் சுற்றுவது மிகவும் இயல்பாக வந்தது. இதனால் நான் கடந்த இரண்டு ஆண்டுகளில் நான்கு உலக சாதனைகளை புரிந்துள்ளேன்.
தற்போது கண்களை கட்டிக்கொண்டு யோகாசனங்கள் செய்து சிலம்பம் சுற்றி மேலும் ஒரு புதிய உலக சாதனை செய்துள்ளேன். இனிவரும் நாட்களில் பல்வேறு உலக சாதனைகளை செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்குள் எழுந்துள்ளது இது தருணத்தில் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்த பெற்றோர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.