பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்.
கோவை வ.உ.சி பூங்கா பகுதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை மாவட்ட கூடைப்பந்து சங்க துணை தலைவர் பழனிச்சாமி கூறியதாவது:-
56வது ஆண்களுக்கான நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை மற்றும் 20வது பெண்களுக்கான சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பை கோவையில் இன்று துவங்க உள்ளது. இந்த போட்டிகளில் அகில இந்திய அளவில் முன்னணியில் உள்ள அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இன்று துவங்க உள்ள இந்த போட்டிகள் “ஜுன் 1ம்தேதி வரை துவங்கி 6 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் இந்திய அளவில் முன்னணியில் உள்ள 10 அணிகள் மற்றும் பெண்கள் பிரிவில் 8 அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஆண்கள் பிரிவில், புதுடில்லியை சேர்ந்த இந்திய கப்பல் படை அணி சார்பாக லோனாவாலா, இந்திய விமானப்படை அணி, இந்தியன் இரயில்வே அணி, பெங்களூரு பாங்க் ஆஃப் பரோடா அணி, திருவனந்தபுரம் கேரளா போலீஸ் அணி, சென்னை இந்தியன் வங்கி அணி, சென்னை வருமானவரி அணி, சென்னை தமிழ்நாடு கூடைப்பந்து கழக அணி, திருவனந்தபுரம் கேரளா மாநில மின்சார வாரிய அணி மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இதேபோல், பெண்கள் பிரிவிலும் 8 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.
ஆண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் சுழற்கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் டாக்டர். என்.மகாலிங்கம் கோப்பையும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு பரிசாக ரூ.20 ஆயிரம், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.15 ஆயிரம் மும் வழங்கப்படும்.
பெண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு ரூ.50 ஆயிரம் மற்றும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் சுழற் கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ.25 ஆயிரம் மற்றும் சுழற் கோப்பையும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு பரிசாக ரூ.15 ஆயிரம், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இத்தொடரில் சிறப்பாக விளையாடும் வீராங்கனைக்கு சிறந்த விளையாட்டு வீராங்கனை என்ற விருதும் வழங்கப்படும் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், சி.ஆர்.ஐ பப்ம்ஸ் நிர்வாக இயக்குநர் செல்வராஜ், செயலளார் பாலாஜி, பொருளாளர் தீபாலா, என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil