பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
கோவை மாவட்ட டென்னிஸ் சங்கம் சார்பில் கோவை பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கடந்த ஐந்து ஆண்டுகளில் 50 இடங்களுக்குள் வெற்றி பெற்று சாதனை புரிந்த வீரர் வீராங்கனைகளுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் இந்திய அளவில் முதலிடங்களை பெற்ற 13 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுகளை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் வழங்கி கவுரவித்தார்.
விருது நிகழ்வினை தொடர்ந்து மேடையில் உரையாற்றிய கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், "குழந்தைகள் மத்தியில் விளையாட்டு போட்டிகள் என்பது மிக ஆரோக்கியமானது. அது மனதையும் உடலையும் தினம் தினம் ஊக்குவிக்கும். இது போன்ற விளையாட்டுகளில் கவனம் செலுத்தினால், குழந்தைகள் மனதை சீர்குலைக்கும் எந்த ஒரு செயல்களிலும் பாதை மாறி அமையாதவாறு புதியதோர் மனவலிமை உடைய பாதையை ஏற்படுத்தும். அதற்கு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் நேரங்களை விளையாட்டில் கழித்து அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்." என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil