Advertisment

பொங்கல் திருவிழா: கோவையில் 23-வது ஆண்டாக அரங்கேறிய ஐவர் கால்பந்து போட்டி

பொங்கல் திருவிழாவை கோவையில் முன்னிட்டு 23-வது ஆண்டாக தென்னிந்திய அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coimbatore; Football tournament at Puliakulam on pongal festival tamil news

Football tournament held at Puliakulam on pongal festival, Coimbatore

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

Advertisment

கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்கினார் கோவை மாநகர காவல்துணை ஆணையாளர்.

கோவை புலியகுளம் கால்பந்து கழகத்தின் சார்பில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 23வது ஆண்டாக ஐவர் கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. அதேபோல 23வது ஆண்டாக பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக புலியகுளம் பகுதியில் உள்ள புனித அந்தோணியார் பள்ளி மைதானத்தில் விறுவிறுப்பாக கால்பந்து போட்டி நடைபெற்றது.

நேற்று காலை 6:00 மணி முதல் இரவு 11 மணி வரை மின்னொளியில் இந்த போட்டிகள் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு, கேரளா மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் இருந்து வந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

மொத்தமாக கடந்த மூன்று நாட்களில் நடைபெற்ற போட்டியில் 64 குழுவினர் 640 வீரர்கள் விளையாடினர். மொத்தம் 97 ஆட்டம் ஆடப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று இறுதிக்கட்ட போட்டி நடைபெற்றது.

இந்த இறுதிக்கட்ட போட்டியில் ஏ.ஜே.எஸ் அணியும் ரத்தினம் கல்லூரி அணியும் மோதின.

அப்போது இரண்டு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று என்ற புள்ளியில் சமநிலையில் நின்றது.

பின்னர் டைபிரேக்கர் முறையில் ஏ.ஜே.எஸ் அணி மூன்று புள்ளிகளும் ரத்தினம் கல்லூரி அணி ஒரு புள்ளியும் பெற்றது. தொடர்ந்து ஏ.ஜே எஸ் அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அந்த அணிக்கு பயாஸ் நினைவு கோப்பை வழங்கப்பட்டது.

publive-image

அதேபோல நடைபெற்ற போட்டியில் சிறந்த ஆட்டக்காரராக ஏ. ஜே.எஸ்.அணியின் லோகேஷ் அறிவிக்கப்பட்டார். சிறந்த கோல் கீப்பராக ட்ரீம் எஃசி அணியின் சதீஸ் அறிவிக்கப்பட்டார்.

தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் சிலம்பரசன், எம் கே குரூப் ஆஃப் கம்பெனிஸின் நிர்வாக இயக்குனர் மணிகண்டன், புனித அந்தோணியார் அருள்தளத்தின் பங்கு தந்தை ராயப்பன், புனித மிக்கேல் அதிதூதர் ஆலய பங்குதந்தை ஜார்ஜ் தனசேகர்,

புனித அந்தோணியார் அருள் தளத்தின் உதவி பங்கு தந்தை ஜெரால்டின்,டி-1 காவல் ஆய்வாளர் செந்தில், ஆலம் விழுதுகள் நிர்வாக இயக்குனர் மீனா ஜெயக்குமார், ஆரிய வைத்திய சாலையின் பொது மேலாளர் ரவீந்திரன்,ரெவா மோட்டார்ஸ்&பம்ப் நிர்வாக இயக்குனர் இந்திரா, வேதா ஸ்போர்ட்ஸ் கிருஷ்ணகுமார் ஆகியோர் சால்வை அணிவித்து கேடயங்கள் வழங்கினர்.

publive-image

கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற போட்டியில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போட்டிகளை கண்டுகளித்தனர். தொடர்ந்து குழுக்கள் முறையில் பார்வையாளர்களுக்கும் பரிசளிக்கப்பட்டது.

அதேபோல கடந்த மூன்று நாட்களாக போட்டியாளர்களுக்கு மருத்துவ உதவிகள் அளித்த 108 ஆம்புலன்ஸ்ற்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sports Coimbatore Football
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment