நீலகிரி மாவட்டம் குன்னூரில் வசிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர் விஜயின் மகளான பிரியங்கா, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஆதித்யா மல்லையா பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கார் பந்தயத்தில் பங்கேற்கும் ஆர்வத்தில், கோ கார்ட்டிங் கார் பந்தயங்களில் பயிற்சி பெற்றார். கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெற்ற நான்கு பயிற்சி பந்தயங்களில் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்திய பிரியங்கா - ஆண்கள்-பெண்கள் பங்கேற்ற பிரிவில் 8வது இடம் பிடித்தார். மேலும், மகளிர் பிரிவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
Advertisment
Advertisements
தற்போது வரக்கூடிய கோவையை கறி மோட்டார் ஸ்பீட் வே போட்டியில் பங்கேற்கும் முதல் தமிழகப்பெண் என்ற பெருமைக்குரிய மாணவி ஆவார் இவர். ஆகஸ்ட் மாதம் நடைபெறும் பார்முலா 4 கார் பந்தயத்தில் அகுரா ரேசிங் அணி சார்ப்பில் பங்கேற்கிறார். புகழ் பெற்ற தேசிய ரேசிங் சாம்பியன் சரோஷ் ஹட்டாரியா என்பவர் தான் பிரியங்காவின் பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil