பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
கோவையில் பி.எஸ்.ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ஆண்டுதோறும் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக 57வது கூடைப்பந்து போட்டிகள் கடந்த 26ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது
இந்த போட்டியில் இந்திய கடற்படை அணி , பேங்க் ஆப் பரோடா அணி, இந்திய ராணுவ அணி, இந்தியன் வங்கி அணி, வருமானவரித்துறை அணி, சுங்கவரிதுறை அணி, கேரள மின்சார வாரிய அணி உட்பட பல்வேறு அணிகள் நாடு முழுவதும் இருந்து கலந்து கொண்டன. இதன் இறுதிப் போட்டிக்கு சென்னை வருமானவரித்துறை அணி மற்றும் இந்திய ராணுவ அணி முன்னேறின.
நேற்று மாலை நடந்த இறுதிப் போட்டியில் இரு அணிகளும் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் இந்திய இராணுவ அணியை வருமான வரித்துறை அணி 75 - 71 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பரிசுகளையும் கோப்பைகளையும் வழங்கினார்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக ஒரு லட்ச ரூபாய் மற்றும் பி.எஸ்.ஜி சுழல் கோப்பையும், இரண்டாம் பரிசாக 50,000 ரூபாய் மற்றும் கோப்பையும் , மூன்றாம் பரிசாக 20 ஆயிரம் ரூபாய் மற்றும் நான்காம் பரிசாக 15 ஆயிரம் ரூபாய் ஆகியவை வழங்கப்பட்டது. சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசாகவும் வழங்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“