பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
coimbatore: கோவையின் மிகப்பெரிய மாரத்தான் போட்டியான "கோயம்புத்துார் மராத்தான் 2023 11-வது பதிப்பு டிசம்பர் 17" அன்று நடைபெறுகிறது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 18,500-க்கும் அதிகமான ஓட்ட பந்தய வீரர்கள் பங்கேற்க உள்ளனர் இதற்காக டிசம்பர் 16 ஆம் தேதி சனிக்கிழமையன்று காலை 9"மணி முதல் மாலை 5 மணி வரை கொடிஸ்ஸியா ஹால் ஏ-இல் மாரத்தான் எக்ஸ்போ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் ரன்னர்ஸ் மற்றும் ஷோ ஸ்பேஸ் ஈவன்ட்ஸ் உடன் இணைந்து கோயம்புத்தூர் புற்றுநோய் அறக்கட்டளையால் (சிசிஎஃப்) புற்று நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆலோசனை, பராமரிப்பு மற்றும் ஆதரவிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு அறக்கட்டளையான சிசிஎஃப்-க்கு நிதி திரட்ட இது நடத்தப்படுகிறது.
இந்த வாக்கரூ கோயம்புத்தூர் மாரத்தான் ஆனது தமிழ்நாடு தடகள சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது. மாரத்தான் நான்கு நிகழ்வுகளை உள்ளடக்கியது.
ஒரு 21.1 கிமீ ஓட்டம் (அரை மாரத்தான்). ஒரு 10 கிமீ ஓட்டம், ஒரு 5 கிமீ ஓட்டம்/நடை மற்றும் ஒரு கார்ப்பரேட் ரிலே, ஒவ்வொரு அணியிலும் 4 பங்கேற்பாளர்கள். மொத்தமாக 21.1 கிமீ தூரத்தை கடப்பார்கள்.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கென்று தனித்தனி பிரிவுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூபாய் 4.25 லட்சத்துக்கும் அதிகமான பரிசுத்தொகைகள் வழங்கப்படும்.
இது குறித்து கோயம்புத்துார் மராத்தான் 2023 11வது பதிப்பு ஏற்பாட்டாளர்கள் கூறியதாவது:-
கோயம்புத்தூர் மாரத்தானின் 11 வது பதிப்பில் கோயம்புத்தூர் புற்றுநோய் அறக்கட்டளையுடன் இணைந்து இந்தப் போட்டியை நடத்த இந்த சிறப்புரிமை வாக்கரூவுக்கு கிடைத்துள்ளது. இந்த ஆண்டு ("18500+") பதிவுகளைப் பார்ப்பது ஊக்கம் அளிக்கிறது.
உடல் திடம் மற்றும் நல்வாழ்வுக்கு நடைப்பயிற்சியை ஆதரிக்கும் வாக்கரூ, எங்கள் பிராண்டின் நோக்கப்பார்வையான ("Point of View - POV") - வாக் வாக் வாக் வாக் வித் வாக்கரூ"-க்கு இணங்க, சிறந்த ஆரோக்கியத்திற்கு நடைபயிற்சியை துணை கொள்ள தனிநபர்களைத் தூண்டும் இந்த நிகழ்வில் கூட்டு சேருவதில் பெருமிதம் கொள்கிறது.
நாங்கள் 11"வது பதிப்பைத் தொடங்கும்போது. எங்களின் நோக்கம் போட்டியையும் தாண்டி புற்றுநோய்க்கு எதிரான போர் தடுப்பு, முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கைமுறையின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கி செல்கிறது.
இந்த நோக்கத்துக்கு நாங்கள் எங்கள் ஆதரவை வழங்குகிறோம் மற்றும் அனைத்து ஓட்டப்பந்தய வீரர்களும் அந்தந்த பந்தயப் பிரிவுகளில் முடித்து வெற்றிபெற வாழ்த்துகிறோம்" என்று கூறினர்.
இந்த மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கலந்து கொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த இணைய பக்கத்தில் நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம்:
https://coimbatoremarathon.com/
https://www.indiarunning.com/events/coimbatore-marathon-2023-18593
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.