கடந்த ஐந்து வருடங்களாக கோவையை சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான டி 10 பி.பி.சி.சி.எல்.(P.B.C.C.L) கிரிக்கெட்தொடர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியினருக்கு நிதி திரட்டும் வகையில் நடைபெற்று வரும் இதில் இந்த ஆண்டிற்கான தொடர் இறுதியில் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களை சேர்ந்த காது கேளாத,வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இதில் முதலில் ஆடிய தமிழ்நாடு அணி பனிரெண்டு ஓவர்களில் 115 ரன்களை குவித்தனர்.தொடர்ந்து ஆடிய கேரள அணியினர் பதினோரு ஓவர் மூன்று பந்துகளில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 116 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிகளுக்கு தேவையான விளையாட்டு சாதனங்கள் மற்றும் நிதி அளிக்கும் வகையில் நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற கேரள அணிக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த தமிழ்நாடு அணிக்கு பதினைந்தாயிரம் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. காது மற்றும் வாய் பேச இயலாதோர் மைதானத்தில் விளையாடிய கிரிக்கெட் போட்டியை பார்வையாளர்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil