scorecardresearch

சர்வதேச பாரா எறிபந்து போட்டி: கோவை மாற்றுத் திறனாளிகள் தங்கம் வென்று அசத்தல்

நேபாள்-இந்தியா இடையேயான பாரா அமர்வு எறிபந்து போட்டியில் தங்கப் பதக்கங்களை கோவையை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் வெனறு அசத்தினர்.

Coimbatore Paralympic Athletes Win Gold at Indo-Nepal throwball championship Tamil News
Indo-Nepal throwball championship: Coimbatore Paralympic Athletes Win Gold

பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்.

நேபாளில் நடைபெற்ற பாரா அமர்வு எறிபந்து போட்டியில் தங்க பதங்களை வென்று கோவை திரும்பிய மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுகளை தெரிவித்தார்.

நேபாள்-இந்தியா இடையேயான இரண்டு நாள் போட்டியாக கடந்த 19 மற்றும் 20 -ஆம் தேதியன்று நேபாளில் உள்ள காரமண்டோவில் பாரா அமர்வு எறிபந்து போட்டி நடைபெற்றது. இதில் தமிழகம் சார்பில் கோவையை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் சதீஷ்குமார், மோகண்குமார் உட்பட ஆகிய இருவர் தேர்வாகி மாவட்ட நிர்வாகம் ஏற்பாட்டில் போட்டியில் பங்கேற்றனர்.

மொத்தமாக இந்தியா சார்பில் 14 வீரர்கள் பங்கேற்று விளையாடினர்.விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கோவையை சேர்ந்த இரண்டு மாற்றுத்திறனாளிகளும் தங்கப் பதக்கங்களை வென்றனர். இதனையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பாராட்டுகளை தெரிவித்தார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Coimbatore paralympic athletes win gold at indo nepal throwball championship tamil news

Best of Express