பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்
coimbatore: பிரபல நிறுவனமான ஜே.கே டயர் நிறுவனம் மற்றும் "FMSCI" எனப்படும் இந்திய மோட்டார் விளையாட்டு கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் ஆண்டுதோறும் தேசிய அளவிலான கார் பந்தயம் மற்றும் இருசக்கர வாகன சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நாடு முழுவதும் பல்வேறு சுற்றுகளாக நடத்த திட்டமிடப்பட்டு, அதன் முதல் சுற்று போட்டிகள் கோவை உள்ள செட்டிபாளையம் பகுதியில் உள்ள கறி மோட்டார் ஸ்பீடு-வே வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
ஜே.கே டயர் நோவிஸ் கோப்பைக்காக எல்.ஜி.பி ஃபார்முலா 4 கார் பந்தயம் போட்டிகள் நடத்தப்பட்டது. 10 சுற்று, 15 சுற்று என வெவ்வேறு வகையில் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், தேசிய அளவில் சிறந்த கார் பந்தய வீரர்கள் பலர் பந்தயத்தில் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு பிரிவிலும் 20 பேர் என பங்கேற்று போட்டிகள் நடத்தப்பட்ட சூழலில் வீரர்கள் மின்னல் வேகத்தில் வாகனங்களை இயக்கி பார்வையாளர்களை கவர்ந்தனர். முதல் சுற்று போட்டிகள் கோவையில் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகள் அடிப்படையில் அடுத்தடுத்த சுற்றுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“