விளையாட்டு வீரர்களுக்கு இலவச மூட்டு அறுவை சிகிச்சை: கோவையில் புதிய திட்டம் தொடக்கம்

இலவச மூட்டு அறுவை சிகிச்சையால் மீளும் விளையாட்டு வீரர்களுக்கான ஆர்.சி.டி லிம்ப் 2 ரன் என்ற புதிய திட்டத்தை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

இலவச மூட்டு அறுவை சிகிச்சையால் மீளும் விளையாட்டு வீரர்களுக்கான ஆர்.சி.டி லிம்ப் 2 ரன் என்ற புதிய திட்டத்தை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

author-image
WebDesk
New Update
Coimbatore Rotary Club Limp 2 Run free surgeries for ligament injuries knee joint Tamil News

ஆர்.சி.டி லிம்ப் 2 ரன் திட்டம் துவக்கி முதற்கட்டமாக ரூபாய் 40 லட்சம் செலவில் 30 பயனாளிகளுக்கு உதவிகள் செய்தனர்.

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

coimbatore:கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இலவச மூட்டு அறுவை சிகிச்சையால் மீளும் விளையாட்டு வீரர்களுக்கான ஆர்.சி.டி லிம்ப் 2 ரன் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்.சி.டி லிம்ப் 2 ரன் திட்டம் தொடங்கி முதற்கட்டமாக  ரூபாய் 40 லட்சம் செலவில் 30 பயனாளிகளுக்கு உதவிகள் செய்தனர். 

Advertisment

இந்நிலையில், விளையாட்டு வீரர்கள் மற்றும் நிதி வசதியற்றவர்களுக்கான ஆர்.சி.டி லிம்ப் 2 ரன் புதிய சேவை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இரண்டு வகையாக  அமல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தில் மூட்டு வலியால் பாதிக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள் என ஒரு வகையும், இதே வலியால் தினமும் அவதிப்படும் நிதிவசதியற்றவர்கள் என இருவரை தேர்வு செய்து, இலவச சிகிச்சை வழங்கப்படுகிறது.

40 லட்சம் ரூபாய் சர்வதேச நிதியிலிருந்து தொடங்கப்பட உள்ள இந்திட்டத்திற்கான தொடக்க விழா கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில்  நடைபெற்றது. இந்த திட்டத்தின் முதல் பயனாளியாக அன்னூரை சேர்ந்த கபடி விளையாட்டு வீரரும், வெல்டிங் தொழிலாளியான ராஜதுரை பயனடைந்தார். 

Advertisment
Advertisements

இந்த திட்டத்தின் தலைவர் காட்வின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்ட ஆளுனர் விஜயக்குமார், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து சிறப்பித்தனர்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: