கோவையை அடுத்த அன்னூர் பகுதியை சேர்ந்தவர்கள் பிரபாகரன்-கிருத்திகா தம்பதியினர். இவர்களது இளைய மகன் ஸ்ரீசாய் குரு 8 வயதான இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். ஸ்ரீசாய், கடந்த பத்து மாதங்களாக பிரபல யோகா சாதனை மாணவி வைஷ்ணவியிடம் யோகா பயிற்சி எடுத்து வருகிறார்.
இந்நிலையில் யோகாவை விரைவாக கற்று கொண்ட சிறுவன்,யோகாவின் மிக கடினமான விருட்ச விருட்சிகம், கண்ட பெருண்டம், சப்த திம்பாசனம், சக்ர பந்தாசனம் போன்ற ஆசனங்களை கற்று கொண்டுள்ளார். ஆரம்ப கட்ட பயிற்சி நேரங்களிலேயே தேசிய,சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்ட ஸ்ரீ சாய், இது வரை சுமார் 23 போட்டிகளில் கலந்து கொண்டு அனைத்து போட்டிகளிலும் பெரும்பாலும் முதல் பரிசையும் வென்றுள்ளார்.
Advertisment
Advertisements
இவரது அசாத்தியமான சாதனைகளை பாராட்டி மதுரை தமிழ்ச்சங்கம்,கோவை மாவட்ட நடிகர் சங்கத்தினர் என பல்வேறு அமைப்பினர் விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளனர். பத்து மாதங்களில் 23 பதக்கம் மற்றும் கோப்பைகளை வென்று குவித்துள்ள சிறுவனுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil