நேபாளத்தில் நடந்த சிலம்ப போட்டியில் கோவை மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
நேபாளத்தில் சர்வதேச அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று கோவை வந்தடைந்த வீரர்களுக்கு கோவை ரயில் நிலையத்தில் உற்ச்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது,
Advertisment
உலக யூத் கேம்ஸ் பெடரேஷன் சார்பாக, நேபாலத்தில், சர்வதேச அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் 2023' போட்டி நேபாளத்தில், நடைபெற்றது. இதில் இந்தியா, நேபாளம், ஸ்ரீலங்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியா சார்பாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இருந்து மொத்தம் 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்தியா சார்பாக கோவை மாவட்டத்தில் இருந்து சூலூர் ரௌத்ரா அகாடமியை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஒற்றைகம்பு வீச்சு, இரட்டை கம்பு வீச்சு , மான் கொம்பு, வேல்கம்பு, சுருள் வாள் மற்றும் தொடுமுறை என்ற பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் 12, 14, 16 , 17 , ஆகிய வயது மற்றும் 21 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒற்றை கம்பு வீச்சில் கோவை ரௌத்திரா அகாடமியை சேர்ந்த வீரர்கள் ஒற்றைகம்பு வீச்சு பிரிவில் கலந்து கொண்டு அக்ஷிதா ஸ்ரீ 12 வயதுக்கு உள்பட்ட பெண்கள் பிரிவில் முதலிடம்,நேஹா 14 வயதுக்கு உள்பட்ட பெண்கள் பிரிவில் முதலிடமும் , லட்சுமி 14 வயதுக்கு உள்பட்ட பெண்கள் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்தனர்.
Advertisment
Advertisements
தொடர்ந்து ஸ்ரீ முகிலா 16 வயதுக்கு உள்பட்ட பிரிவில் முதலிடம், சஷ்டி பிரியா 14 வயதுக்கு உள்பட்ட பெண்கள் பிரிவில் முதலிடம், மதன் குமார் 14 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் முதலிடம், தனேஸ்வர் 17 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் முதலிடம் பெற்று தங்க பதக்கம் வென்றனர்.
மேலும் இளையோர் 12 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ஜோகித் ஹர்சா மற்றும் 14 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் பிரிதிவிக் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றனர். யோகா போட்டியில் 21 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் மகாலட்சுமி முதலிடம் பிடித்து தங்கம் பதக்கங்களை வென்று, இன்று கோவை திரும்பினர், கோவை ரயில்நிலையத்தில் அவர்களுக்கு, மேள தாளங்கள் முழங்க, மாணவ மாணவிகளை வரவளற்ற பெற்றோர்கள், பொதுமக்கள் வீரர்களுக்கு, இனிப்புகள் வழங்கியும், மாலை அணிவித்தும் வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பயிற்சியாளர்களான வெங்கடேஷ், “சிலம்ப போட்டிகளில் தங்களது திறமையை வெளிபடுத்த ஆண்கள் மட்டுமின்றி பெண் குழந்தைகளும் தயாராகி வருகின்றனர். இதனை வரவேற்க்கும் விதமாக அரசு, இது சார்ந்த வீரர்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“