சர்வதேச சிலம்பம்: 52 பதக்கங்களை அள்ளிய தமிழக வீரர், வீராங்கனைகள்
மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் கோவையை சேர்ந்த 17 மாணவ மாணவிகள் 52 பதக்கங்கள் வென்று இரண்டாம் இடம் பிடித்து அசத்தியுள்ளனர்.
அடிமுறை, வாள்வீச்சு, சுருள்வாள், கம்பு சண்டை, மான் கொம்பு ஆகிய பிரிவுகளில் நடைபெற்ற சிலம்பம் போட்டிகளில் 8 தங்கம், 15வெள்ளி, 29 வெண்கலம் என 52 பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தனர்.
பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
Advertisment
மலேசியா நாட்டில் உள்ள கோலாலம்பூரில் இன்டர்நேஷனல் இன்விடேஷன் சிலம்பம் சாம்பியன்ஷிப் 2023 எனும் சர்வதேச போட்டி அண்மையில் நடைபெற்றது.இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்ட இதில் இந்தியா சார்பில் கோவையை சேர்ந்த 17 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் அடிமுறை, வாள்வீச்சு, சுருள்வாள், கம்பு சண்டை, மான் கொம்பு ஆகிய பிரிவுகளில் நடைபெற்ற சிலம்பம் போட்டிகளில் 8 தங்கம், 15வெள்ளி, 29 வெண்கலம் என 52 பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தனர்.
ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பில் இரண்டாவது இடத்தை பெற்று 17மாணவ மாணவிகள் சாதனை படைத்தனர். இந்நிலையில், கோவை திரும்பிய வீரர் வீராங்கனைகளுக்கு பொதுமக்கள்,பெற்றோர்கள், சக மாணவர்கள் என ஒன்றிணைந்து மேளதாளங்களுடன் பட்டாசுகள் வெடித்து பாராட்டுகளை தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil