கோவையில் மாநில அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகின்றது.
இதனிடையே கோவை மாவட்ட ஆட்சயரிடம் மனு அளிப்பதற்காக மாற்றுத்திறனாளி வீர்ர்கள் சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். ஆனால் தேர்தல் நேரம் என்பதால் மாவட்ட ஆட்சியரை சந்திக்க முடியவில்லை.
இதையடுத்து, மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் ஜோசப் சுரேஷ் மற்றும் அஜய் குமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது கூறியதாவது,
தேசிய சர்வதேச அளவில் மூன்று சக்கர வாள் வீச்சு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு வெற்றிகள் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளோம். விலை உயர்வான விளையாட்டு உபகரணங்களை சொந்த செலிவிலேயே வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.
தமிழக அரசு மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது. ஆனால் வீல் சேர் வாள் வீச்சு ஃபெடரேஷன் மற்றும் அம்புட்டி ஸ்போர்ட்ஸ் ஆப் இந்தியா என்ற அமைப்பின் நிர்வாகிகளாக செயல்படும் சிலர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சங்கத்தின் வரவு செலவு கணக்குகளை கூட இதுவரை காட்ட முன் வரவில்லை ,குறிப்பாக தற்போது தேசிய, சர்வதேச போட்டிகளுக்கு தேர்வு செய்வதில் கூட முறைகேடுகள் நடக்கிறது.
இதனால் தமிழக வீரர்,வீராங்கனைகளுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது.
இதுகுறித்து மத்திய மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையங்கள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதேபோல கோவையை சேர்ந்த மாற்றுத்திறனாளி வாள் வீச்சு வீராங்கனை தீபீகா ராணி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தது குறிப்பிடதக்கது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“