scorecardresearch

காமன்வெல்த் ஹைலைட்ஸ்: 3 தங்கம் வென்ற வென்ற இந்திய மல்யுத்த வீரர்கள்… அரை இறுதியில் ஹாக்கி அணி தோல்வி!

Commonwealth Games 2022 Sports event highlights in tamil: காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான பதக்கப்பட்டியலில், 9 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என்று 26 பதக்கங்களுடன் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.

Commonwealth Games; Hat-Trick Gold For India In Wrestling, full medals list
Commonwealth Games 2022 Sports event highlights in tamil:

Commonwealth games 2022 sports Tamil News: 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 72 நாடுகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியின் ஹாக்கி அரையிறுதி போட்டியில் நேற்று இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. பலம் வாய்ந்த இரு அணிகளும் மோதுவதால் போட்டி மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகம் இருந்தது.

இந்த அரையிறுதி ஆட்டத்தில் தொடக்கம் முதலே இரு அணிகளும் சிறப்பாக விளையாடின. ஆட்டத்தின் முதல் பாதியில் ஆஸ்திரேலியா ஒரு கோல் அடிக்கேவே, இண்டாவது பாதியில் இந்திய மகளிர் அணி பதில் கோல் அடித்து, சமன் செய்தது. இதனால் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற சம நிலையில் இருந்தன.

ஆட்டத்தின் வெற்றியை நிர்ணயிக்கும் வகையில் பெனால்டி ஷூட் அவுட் முறை வழங்கப்பட்ட நிலையில், அதில் ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியை ஆஸ்திரேலிய அணி எதிர்கொள்கிறது. இந்திய அணி அடுத்ததாக வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்கிறது.

மல்யுத்தத்தில் 3 தங்கங்களை குவித்த இந்திய வீரரர், வீராங்கனைகள்…

நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான மல்யுத்தத்தில் 65 கிலோ எடைப்பிரிவின் இறுதி சுற்றில் நடப்பு சாம்பியனான இந்திய வீரர் பஜ்ரங் பூனியா 9-2 என்ற புள்ளி கணக்கில் கனடாவின் லாச்லன் மெக்நீலை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தக்க வைத்துக் கொண்டார்.

அரியானாவைச் சேர்ந்த 28 வயதான பஜ்ரங் பூனியா டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றவர் ஆவார்.

இதே போல் பெண்களுக்கான மல்யுத்தத்தில் 57 கிலோ எடைபிரிவில் இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக் 3-7 என்ற கணக்கில் 2 முறை சாம்பியனான ஒடுனயோ போலாசட்விடம் (நைஜீரியா) தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கம் வென்றார்.

62 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை சாக் ஷி மாலிக் கனடாவின் கோடிநெஸ்சை வீழ்த்தி தங்கமங்கையானார். 0-4 என்ற புள்ளி கணக்கில் பின்தங்கி இருந்த சாக்‌ஷி மாலிக்கு அதன் பிறகு சரிவில் இருந்து மீண்டு எதிராளியை சாய்த்து அசத்தினார்.

இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்த மற்றொரு வீரரான தீபக் புனியா இந்தியாவுக்கு 9-வது தங்க பதக்கத்தை பெற்று தந்துள்ளார். ஆடவருக்கான ப்ரீஸ்டைல் 86 கிலோ பிரிவில் தீபக் புனியா 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தானின் முஹம்மது இனாமைத்தை வீழ்த்தி தங்க பதக்கம் வென்றார்.

அடுத்து நடைபெற்ற மல்யுத்த போட்டிகளில் இந்தியாவின் திவ்யா கக்ரன் மற்றும் மோஹித் கிரேவால் ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்று இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை உயர்த்தினர்.

முன்னதாக, மல்யுத்தம் நடந்த இடத்தில் மேற்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த ஸ்பீக்கர் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பிரச்சினையும், குழப்பமும் நிலவியதால் போட்டிகள் தொடங்குவதில் 2 மணி நேரம் தாமதமாகியது.

காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான பதக்கப்பட்டியலில் ஆஸ்திரேலியா 50 தங்கம், 44 வெள்ளி, 46 வெண்கலம் என்று மொத்தம் 134 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 9 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என்று 26 பதக்கங்களுடன் 5-வது இடத்தில் இருக்கிறது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Commonwealth games hat trick gold for india in wrestling full medals list