Birmingham 2022 Commonwealth Games: காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் வருகிற 28 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 8 ஆம் தேதி வரை இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த தமிழக தடகள வீராங்கனை தனலெட்சுமி மற்றும் கர்நாடக தடகள வீராங்கனை ஐஸ்வர்யா பாபு ஆகியோர் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
24 வயதான தமிழ்நாடு தடகள வீராங்கனை தனலெட்சுமி 100 மீட்டர் மற்றும் தொடர் ஓட்டம் ஆகிய பிரிவுகளில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். அவருக்கு, உலக தடகளப் போட்டியின் ஒருமைப்பாட்டு பிரிவு (AIU) வெளிநாட்டில் நடத்திய ஊக்கமருந்து சோதனையில் தடைசெய்யப்பட்ட ஸ்டீராய்டுக்கு பாசிட்டிவ் என்று கண்டறியப்பட்டது.
“AIU நடத்திய ஊக்கமருந்து சோதனையில் தனலட்சுமிக்கு பாசிட்டிவ் என்று கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. அவர் பர்மிங்காமில் நடக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க மாட்டார், ”என்று AIU-வின் உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தனலட்சுமி 100மீ மற்றும் 4×100 மீட்டர் தொடர் ஓட்ட இந்திய அணியில் டூட்டி சந்த், ஹிமா தாஸ் மற்றும் ஸ்ரபானி நந்தா போன்றோருடன் இடம்பிடித்தார். அமெரிக்காவில் யூஜினில் நடந்து வரும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியிலும் அவர் இடம் பெற்றிருந்தார். ஆனால் விசா பிரச்சனைகள் காரணமாக ஷோபீஸில் இடம் பெற முடியவில்லை.
ஜூன் 26 அன்று நடந்த கோசனோவ் மெமோரியல் தடகளப் போட்டியில் தனலட்சுமி 200 மீ தூரத்தை 22.89 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார். தேசிய சாதனை படைத்த சரஸ்வதி சாஹா (22.82 வினாடிகள்) மற்றும் ஹிமா தாஸ் ஆகியோருக்குப் பிறகு 23 வயதிற்குட்பட்ட மூன்றாவது இந்தியப் பெண்மணி (22.88வி) என்ற பெருமையைப் பெற்றார்.
இந்த நிலையில், தனலட்சுமி ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதேபோல், கடந்த மாதம் சென்னையில் நடந்த தேசிய மாநிலங்களுக்கு இடையேயான தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் போது நாடா (NADA) அதிகாரிகளால் எடுக்கப்பட்ட கர்நாடக மாநில தடகள வீராங்கனை ஐஸ்வர்யா பாபுவின் ஊக்கமருந்து (24 வயது) மாதிரியும் பாசிடிவ் என்ற முடிவை அளித்துள்ளது. இதனால், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இந்திய தடகள அணியில் டிரிபிள் ஜம்ப் (மும்முறை தாண்டுதல் ) மற்றும் நீளம் தாண்டுதல் பிரிவுகளில் இடம்பிடித்திருந்த அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

“தேசிய மாநிலங்களுக்கு இடையேயான சாம்பியன்ஷிப் போட்டியின் போது எடுக்கப்பட்ட டிரிபிள் ஜம்பர் ஐஸ்வர்யா பாபுவின் சாம்பிள் பாசிட்டிவாக வந்துள்ளது” என்று தடகள வட்டாரம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற தேசிய மாநிலங்களுக்கு இடையேயான சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் (ஜூன் 10-14) மறுக்கமுடியாத நட்சத்திரமாக உருவெடுக்க ஐஸ்வர்யா 14.14 மீட்டர் தூரம் தாண்டி டிரிபிள் ஜம்ப்பில் (மும்முறை தாண்டுதல்) தேசிய சாதனையை முறியடித்தார்.
சென்னை போட்டியின் போது நீளம் தாண்டுதல் தகுதிச் சுற்றில் 6.73 மீட்டர் முயற்சி எடுத்தார். அஞ்சு பாபி ஜார்ஜுக்கு (6.83 மீ) பிறகு இந்திய பெண் நீளம் தாண்டுதல் செய்த இரண்டாவது மிக நீண்ட தனிப்பட்ட சாதனை இதுவாகும்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil