சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகள் கடந்த 19 ஆம் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் துபாயில் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்தத் தொடரில், களமாடிய 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதின. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடித்த அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.
லீக் சுற்று ஆட்டங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமையும் முடிவடைந்த நிலையில், ஏ பிரிவில் இருந்து இந்தியா , நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் இருந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவும் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இதில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள முதல் அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் துபாயில் மோதுகின்றன.
சர்ச்சை கருத்து
இந்நிலையில், நேற்று துபாயில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இந்நிலையில், கேப்டன் ரோகித் சர்மாவை விமர்சிக்கும் விதமாக இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷாமா முகமது தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அவரது கருத்துக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ), கிரிக்கெட் ரசிகர்களும், பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
விளக்கம்
இந்த நிலையில், இந்திய கேப்டன் ரோகித்தை விமர்சித்தது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது விளக்கம் அளித்துள்ளார். அதில் தான் ரோகித்தை பாடி ஷேமிங் செய்யவில்லை என்றும், விளையாட்டு வீரர்கள் ஃபிட்டாக இருப்பது பற்றி கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது அளித்துள்ள பேட்டியில், "இது ஒரு விளையாட்டு வீரரின் உடற்தகுதி பற்றிய பொதுவான ட்வீட். இது பாடி ஷேமிங் இல்லை.
ஒரு விளையாட்டு வீரர் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்பினேன். மேலும் அவர் உடல் எடை அதிகமாக இருப்பதாக நான் உணர்ந்தேன், அதனால் நான் அதைப் பற்றி ட்வீட் செய்தேன். அதற்காக காரணமின்றி நான் தாக்கப்பட்டு வருகிறேன். அவரை முந்தைய கேப்டன்களுடன் ஒப்பிட்டு நான் பதிவு போட்டேன். நான் சொல்வது சரிதான். அப்படி சொல்வதில் என்ன தவறு? இது ஜனநாயகம்." என்று அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
'இது பாடி ஷேமிங் இல்ல'... ரோகித்தை விமர்சித்த காங்கிரஸ் நிர்வாகி விளக்கம்
இந்திய கேப்டன் ரோகித்தை விமர்சித்தது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது விளக்கம் அளித்துள்ளார். அதில் தான் ரோகித்தை பாடி ஷேமிங் செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.