கொரோனா தொற்று அச்சுறுத்தல் : உலககோப்பை கால்பந்து போட்டி ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தோனேசியா மற்றும் பெரு நாட்டில் நடைபெற இருந்த உலககோப்பை கால்பந்து போட்டிகள் 2023-ம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தோனேசியா மற்றும் பெரு நாட்டில் நடைபெற இருந்த உலககோப்பை கால்பந்து போட்டிகள் 2023-ம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
கொரோனா தொற்று அச்சுறுத்தல் : உலககோப்பை கால்பந்து போட்டி ஒத்திவைப்பு

உலகளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் உலகளவில் பல விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில்,சில போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Advertisment

அந்த வகையில், இந்தோனேசியாவில் நடைபெற இருந்த 20 வயதுக்குட்பட்ட  ஆண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி மற்றும் பெருவில் நடைபெற இருந்த 17 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து போட்டி, ஆகிய 2 போட்டிகளும் 2023 ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா)அறிவித்துள்ளது.

இது குறித்து சர்வதேச கால்பந்து சம்மேளனம் கூறுகையில்,

கொரோனா தொற்று காரணமாக சர்வதேச விளையாட்டு போட்டிகளை  நடத்துவதற்கு சாதகமற்ற சூழ்நிலை தொடர்ந்து வருகிறது. மேலும் சர்வதேச பயணத்தில் உலகளவில் கடும் கட்டுப்பாடு விக்கப்பட்டுள்ளதால், இந்த போட்டிகள் 2023-ம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கான  இந்தோனேசியா மற்றும் பெருவில் உள்ள அதிகாரிகளுக்கும் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் இதுவரை செய்யப்பட்ட போட்டிக்கான ஏற்பாடுகளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாக "ஃபிஃபா தனது வலைதளத்தில் தெரிவித்துள்ளது.

Advertisment
Advertisements
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Worldcup Foodball

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: