பொன்னியின் செல்வன் நாவலுக்கு விமர்சகர் ஆன அஸ்வின் - ஒருவேள நடிக்கப்போறாரோ!
Ravichandran Ashwin : கோலிவுட்டில் விரைவில் வெளியாக உள்ள படத்தில் ஹர்பஜன் சிங் நடித்து வரும்நிலையில், அஸ்வினையும் அப்படி எதிர்பார்க்கலாமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Ravichandran Ashwin : கோலிவுட்டில் விரைவில் வெளியாக உள்ள படத்தில் ஹர்பஜன் சிங் நடித்து வரும்நிலையில், அஸ்வினையும் அப்படி எதிர்பார்க்கலாமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
corona virus, lockdown, Indian cricket team, Ravichandran Ashwin, Ponniyin selvan, novel, characters name, director Maniratnam, Harbhajan singh, kollywood, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின், பொன்னியின் செல்வன் நாவலை படித்ததோடு மட்டுமல்லாது, அதில் உள்ள கேரக்டர்களின் பெயர்களை சிலாகித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Advertisment
கொரோனா வைரஸ் தொற்று எந்த துறையையும் விட்டுவைக்கவில்லை. சினிமா, விளையாட்டு, பாமர மக்களின் வாழ்க்கை என அனைத்து துறையினரையும் வெகுவாக பாதித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், கிரிக்கெட் வீரர்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின், இந்த ஊரடங்கு காலத்தில் பொன்னியின் செல்வன் நாவலை படிக்க துவங்கியுள்ளார். கிட்டத்தட்ட பாதி நாவலை படித்து முடித்துள்ளதாக தெரிவித்துள்ள அஸ்வின், அதில் உள்ள கேரக்டர்களை அதிகம் விரும்புவதாக தெரிவித்துள்ளார். நாவல் அதிகம் படிப்பவர்களின் சிறந்த தேர்வாக இது இருக்கும். யாரும் தவறவிட்டுவிட வேண்டாம். பொன்னியின் செல்வன் நாவல், ஆங்கிலத்திலும் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
Advertisements
When the lockdown began, I started to read Ponniyin Selvan, I am almost done with it now and feel like I will miss these characters once the book comes to end. Those who love reading novels, please don’t miss out on this one, it’s available in english too. #mindblowing
— Ashwin (During Covid 19)???????? (@ashwinravi99) June 17, 2020
இந்த நாவலில், அதிகமான கேரக்டர்கள் உள்ளன. இந்த நாவலை படித்து முடிப்பதற்குள் அத்தனை கேரக்டர்களை நினைவில் வைத்திருப்பேனா என்பது தெரியவில்லை. அதில் உள்ள கேரக்டர்களின் பெயர்கள் வித்தியாசமாக உள்ளன. இந்த நாவலை படிப்பவர்கள்,தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த பெயர்களை வைக்க விரும்புபவர்கள் என்று அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.
Note: there are so many characters in this story, so don’t try nd dwell deep into them as you start the book. Take it through and read, the characters will grow on you. The names will feel unique nd different, but they will make you feel like you should name your kids after them.
— Ashwin (During Covid 19)???????? (@ashwinravi99) June 17, 2020
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் நாவல் திரைப்படமாக உருவாகிவரும் நிலையில், அஸ்வினின் இந்த பதிவு, அவரும் இந்த படத்தில் நடிக்க இருக்கிறாரோ என்ற கருத்தை அவரது அபிமானிகளிடம் ஏற்படுத்தியுள்ளது.
கோலிவுட்டில் விரைவில் வெளியாக உள்ள படத்தில் ஹர்பஜன் சிங் நடித்து வரும்நிலையில், அஸ்வினையும் அப்படி எதிர்பார்க்கலாமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அஸ்வினுக்குத்தான் வெளிச்சம்!!!
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil