பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் 3 வீரர்களுக்கு கொரோனா தொற்று : இங்கிலாந்து தொடர் துவங்குவதில் சிக்கல்

Pakistan Cricket team : பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 4,67,000 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

By: Updated: June 23, 2020, 10:52:30 AM

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஜூலை மாதத்தில் துவங்க உள்ள கிரிக்கெட் தொடருக்காக, இங்கிலாந்து நாட்டிற்கு வரும் 28ம் தேதி புறப்பட உள்ளது. இந்நிலையில், அணியில் இடம்பெற்றுள்ள சதாப் கான். ஹரீஷ் ரவுப், ஹைதர் அலி உள்ளிட்ட வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த 3 வீரர்களும் உடனடியாக தங்களை சுயதனிமைப்படுத்திக்கொள்ள அணியின் மருத்துவக்குழு அறிவுறுத்தியுள்ளதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 3 வீரர்களில், ரவுப் மட்டுமே, இரண்டு டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சதாப், நீண்டகாலமாக இருந்தபோதிலும், தற்போது தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார், அலி, அறிமுக வீரர் ஆவார்.

இவர்கள் மட்டுமல்லாது, இமாத் வாசிம் மற்றும் உஸ்மான் ஷின்வாரிக்கு ராவல்பிண்டியில் கொரோனா சோதனை நடத்தப்பட்டது. அவர்களுக்கு நெகட்டிவ் என்று முடிவு வந்துள்ள நிலையில், அவர்கள் 24ம் தேதி லாகூர் செல்ல உள்ளனர்.

சோயிப் மாலிக், வக்கார் யூனிஸ் உள்ளிட்ட அணி வீரர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு கராச்சியில் கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது. சோதனை முடிவுகளுக்காக அவர்கள் காத்திருக்கின்றனர்.

29 வீரர்கள் கொண்ட பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்ள உள்ளது. இதில் ரிசர்வ் வீரர்களாக பிலால் ஆசிப், இம்ரான் பட், முசா கான், முகம்மது நவாஜ் உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர்.

பாகிஸ்தான் அணி, இங்கிலாந்துக்கு எதிராக, 3 டெஸ்ட் போட்டிகள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 4,67,000 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க – Three Pakistan players test positive for Covid-19 ahead of England tour

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Corona virus pakistan covid pandemic cricket team shadab khan haris rauf haider ali pakistan cricket board

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X