“சென்னைக்காரங்களுக்கு கொஞ்சம் கூட” – அஸ்வின் ட்வீட்!

ஐரோப்பிய ஃபுட்பால், அமெரிக்க என்.பி.ஏ மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் போன்ற விளையாட்டுகளும் இதனால் பாதிப்படைந்துள்ளது!

By: Updated: March 16, 2020, 09:49:40 AM

Coronavirus cricketer Ravichandran Ashwin tweets on social distancing in Chennai : உலகம் முழுவதும் கொரொனா வைரஸ் அதி தீவிரம் அடைந்துள்ள நிலையில் சென்னையில் போதுமான அளவு விழிப்புணர்வுடன் மக்கள் நடந்து கொள்ளவில்லை என்கிறார் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிசந்திரன். அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “பொது வெளியில் இருந்து தனித்து கொள்ளுதல் என்ற விஷயம் சென்னை மக்களை மத்தியில் போய் சேரவில்லை. கோடை காலம் வந்தால் கொரொனா தொற்று சரியாகிவிடும் என்றோ, அல்லது எதுவும் நடக்காது என்றோ அவர்கள் கருதி வருகின்றார்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகளவிய பெரும் கொள்ளை நோய் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை உலக அளவில் ஒரு லட்சத்து அறுபதாயிரம் பேர் இந்த நோயினால் பாதிப்படைந்துள்ளனர். இந்த நோய்க்கு 6000 நபர்கள் பலியாகியுள்ளனர். இந்தியாவில் இந்த நோய்க்கு ஞாயிற்றுக்கிழமை இரவு நேரப்படி 107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இருவர் மரணமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க : ’ரெய்டும் ஜாலியா தான் இருக்கு’: மாஸ்டர் ஆடியோ லாஞ்சில், கலகல விஜய்!

நோய் பரவலை தடுக்க பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு உலகில் ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டிகள், ஐரோப்பிய ஃபுட்பால், அமெரிக்க என்.பி.ஏ மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் போன்ற விளையாட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது அல்லது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Coronavirus cricketer ravichandran ashwin tweets on social distancing in chennai

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement