கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஆறுதலாக, குறிப்பாக டி20 ரசிகர்களின் பல நாள் பசிக்கான பிரியாணியாக தொடங்கியுள்ளது கரீபியன் பிரீமியர் லீக் தொடர். தொடக்கப் போட்டியில் பொல்லார்டு தலைமையிலான ட்ரிபாங்கோ நைட் ரைடர்ஸ் அணி, கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் மோதின. மழையால் பாதிக்கப்பட்டதால் ஆட்டம் 17 ஓவர்களாக மாற்றப்பட்டது.
Advertisment
இதில், முதலில் பேட்டிங் செய்த கயானா அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணியில் இருந்து ஒரு சீசன் முழுக்க ஒன்றும் விளையாடாமல், கோலியை அழ வைத்த ஷிம்ரோன் ஹெட்மயர் 44 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார்.
சுனில் நரைன் 4 ஓவர்களில் 19 ரன்களையே கொடுத்து சிக்கனம் காட்டினார்.
146 ரன்கள் வெற்றி இலக்குடன் ட்ரிபாங்கோ ரைடர்ஸ் அணியில், சுனில் நரைன் 27 பந்துகளில் 50 ரன்கள் விளாசினார். ஒட்டுமொத்தமாக நரைன் பக்கா ஆல்ரவுண்டர் பெர்ஃபாமன்ஸ் காட்ட, ட்ரிபாங்கோ அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கயானாவின் 11 மேட்ச் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
மற்றொரு சிபிஎல் போட்டியில், பார்படாஸ் ட்ரைடண்ட்ஸ் அணியும், செயிண்ட் கீட்ஸ் அணியும் மோதின.
இதில் முதலில் ஆடிய பார்படாஸ் அணி, 69/6 என்று ஒருக்கட்டத்தில் தள்ளாடியது. இறுதிக் கட்டத்தில் சான்ட்னர் 20 ரன்களும், ரஷீத் கான் 26 ரன்களும் எடுக்க, யாருமே எதிர்பார்க்காத வகையில், 153 ரன்கள் சேர்த்தது பார்படாஸ். அந்த அணியின் நிர்வாகமே இந்த ஸ்கோரை எதிர்பார்த்திருக்காது.
ஆனால், செயிண்ட் கீட்ஸ் அணி, 20 ஓவர்களில் எவ்வளவு முக்கியும், 5 விக்கெட்டுகளை இழந்து, வெறும் 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பார்படாஸ்.
போட்டியில் மற்றொரு சுவாரஸ்யம் என்னவெனில், சுவாரஸ்யமே இல்லாதது தான். ரசிகர்களின்றி நடைபெற்ற போட்டியில், பீல்டர்களே ஸ்டாண்டுகளுக்கு சென்ற சிக்ஸர்களை சீட்டுகளுக்கு அணிந்து குனிந்து தேடி பொறுக்கிப் போடும் நிலையாகிவிட்டது.
இந்த கொரோனா தான் எத்தனை கொடுமையானது!!
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news