கோவையில் கன்சல்டன்ட்ஸ் பிரீமியர் லீக் எனும் சி.பி.எல்.கிரிக்கெட் போட்டிகள் சரவணம்பட்டி பகுதியில் நடைபெற்றது. பள்ளி படிப்பை முடிக்கும் மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்கான ஆலோசனைகளை வழங்கும் கல்வித்துறை நிபுணர்கள் சார்பாக நடைபெற்ற போட்டியில் கேரளா,கர்நாடகா, தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்களை சேர்ந்த 10 அணிகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.
/indian-express-tamil/media/media_files/2025/01/10/l2aKEdm2JiRAju0mPi8Y.jpeg)
தென்னிந்திய மாநிலங்கள் முழுவதும் ஆலோசகர்களை இணைக்கும் வகையில் நடைபெற்ற சி.பி.எல் போட்டிகளை கோயம்புத்தூர் சிங்கம்ஸ் அணியினர் ஒருங்கிணைத்தனர்.
நான்கு நாட்கள் லீக் போட்டிகளாக நடைபெற உள்ள இது குறித்து ஒருங்கிணைப்பாளர் மனோஜ் கூறியதாவது, தென் மாநிலங்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக இந்த போட்டிகள் நடைபெறுவதாகவும் இதில் மூன்று மாநிலங்களை சேர்ந்த கல்வி ஆலோசகர்களும் கலந்து கொள்வதாகவும் தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான்