India vs Sri Lanka 3 T20Is and ODIs Tamil News: இந்தியாவில் சுற்றுப்பயணமாக வரவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகள் மோதும் டி20 தொடர் வருகிற ஜனவரி 3 ஆம் தேதியும், ஒருநாள் தொடர் ஜனவரி 10 ஆம் தேதியும் தொடங்குகிறது. இந்த தொடர்களுக்காக தசுன் ஷனக தலைமையிலான இலங்கை அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த அணிகளில் வனிந்து ஹசரங்க மற்றும் குசல் மெண்டிஸ் போன்ற முன்னணி வீரர்கள் இடம்பிடித்துள்ளர்.
டி20 தொடருக்கான இந்திய அணியை ஹர்திக் பாண்டியா தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மா கட்டைவிரல் காயத்தில் இருந்து இன்னும் குணமடையவில்லை என்றும், தொடரில் அவர் பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.
மேலும், இந்த டி20 தொடருக்கு அதிக முக்கியத்துவம் இல்லாததால், சில மூத்த வீரர்களுக்கு இந்தத் தொடரில் ஓய்வு அளிக்கப்படலாம். இந்தத் தொடருக்கான அணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகாக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், இலங்கைக்கு எதிரான 3 டி20 போட்டிகளில் ஓய்வளிக்கக்கூடிய 4 வீரர்களைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
விராட் கோலி
டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் மூத்த வீரர்களில் விராட் கோலியும் ஒருவர். அவர் இந்தியா இலங்கைக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளதால், அந்தத் தொடரில் உற்சாகமுடன் இருக்க மூத்த வீரர்களுக்கு போதுமான ஓய்வு தேவைப்படும். மேலும், கோலி உலகக் கோப்பைக்குப் பிறகு டி20 போட்டிகளில் விளையாடவில்லை.
ரிஷப் பண்ட்
வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரிஷப் பண்ட்டிற்கு மிகவும் தேவையான இடைவெளி கொடுக்கப்பட்டு, மீண்டும் ஓய்வு அளிக்கப்படலாம். இந்த ஆண்டில் இந்தியா ஒரு சில டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடும் என்பதால், தேர்வாளர்கள் மற்ற சில வீரர்களை சோதிக்கலாம். தவிர பண்ட் அனைத்து வடிவங்களிலும் விளையாடக்கூடியவர். 2023ல், இந்திய அணிக்கு டெஸ்ட் மற்றும் 50 ஓவர் கிரிக்கெட்டில் அவர் அதிகம் தேவை.
அவர் இல்லாத நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு கிடைக்காத சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிச்சனுக்கு வாய்ப்பளிக்கபடலாம்.
கேஎல் ராகுல்
கே.எல். ராகுல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பியதில் இருந்து மிகவும் பரபரப்பான கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அனைத்து வடிவங்களிலும் இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட ராகுல், சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணியை வழிநடத்தினார்.
அவர் இந்த ஆண்டில் நிலையான ஆட்டத்ததை வெளிப்படுத்த போராடினார் என்றே கூறலாம். ஆனால் அவர் தலைமைக் குழுவின் ஒரு பகுதியாக இருப்பதையும் புறக்கணிக்க முடியாது மற்றும் தேர்வுக் குழு ஒரு துணை கேப்டனை முழுவதுமாக கைவிட முடியாது. எனவே, இலங்கை டி20 தொடரில் இருந்து நீக்கப்படுவதற்கு பதிலாக அவருக்கு ஓய்வு அளிக்கப்படலாம்.
முகமது சிராஜ்
அனைத்து முக்கியமான பார்டர்-கவாஸ்கர் டிராபி பிப்ரவரியில் தொடங்குவதால், டீம் இந்தியாவுக்கு முகமது சிராஜின் பந்துவீச்சு தேவைப்படும். மேலும் அவர் புதியதாக இருக்க டி20 தொடரில் ஓய்வு வழங்கப்படலாம். சிராஜ் அனைத்து நிலைகளிலும் இந்தியாவுக்கான சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். மேலும் வழக்கமான வீரர்கள் திரும்பினாலும் அவர் தனது இடத்தைத் தக்கவைக்க வலுவான போட்டியாளராக உள்ளார். அவருக்கு பதிலாக வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஒருநாள் அணியில் சேர்க்கப்படலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil