ஜடேஜா டாப்… பி.சி.சி.ஐ ஒப்பந்தம்; கோடிகளை அள்ளிய வீரர்கள் யார் யார்?

இந்திய ஆல்-ரவுண்டர் வீரரான ரவிந்திர ஜடேஜா ரூ. 7 கோடி வழங்கப்படும் பிசிசிஐ-யின் ஏ+ பிரிவில் இடம் பிடித்துள்ளார்.

Cricket, BCCI Annual Contract List in tamil
BCCI announces annual player retainership 2022-23 Tamil News

இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) இந்த வருடத்திற்கான (2022-2023) வீரர்களின் புதிய ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த வருடாந்திர ஒப்பந்தம் அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை என தேதியிடப்பட்டுள்ளது. வீரர்களின் திறமைக்கேற்ப ஏ+, ஏ, பி, சி என நான்கு பிரிவுகளில் வீரர்களை தரம் பிரித்து சம்பளம் வழங்கப்படுகிறது. இதில் ஏ + பிரிவில் இடம் பிடிக்கும் வீரர்களுக்கு ரூ. 7 கோடியும், ஏ பிரிவில் இடம் பிடிக்கும் வீரர்களுக்கு ரூ. 5 கோடியும், பி பிரிவில் இடம் பிடிக்கும் வீரர்களுக்கு ரூ. 3 கோடியும், சி பிரிவில் இடம் பிடிக்கும் வீரர்களுக்கு ரூ. 1 கோடியும் சம்பளமாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த வருட (அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை) வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி, ஏ+ பிரிவில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, காயத்தால் ஓய்வில் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஆல்-ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா ஆகிய 4 பேர் இடம் பிடித்துள்ளனர்.

பிரிவு ஏ-வில் ஹர்த்திக் பாண்ட்யா, தமிழக வீரர் அஷ்வின், முகமது ஷமி, கார் விபத்தில் சிக்கி தற்போது கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக ஓய்வில் இருக்கும் ரிஷப் பண்ட், அக்சர் பட்டேல் ஆகிய 5 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

பிரிவு பி-யில் செத்தேஷ்வர் புஜாரா, கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் அய்யர், முகமது சிராஜ், சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில் ஆகிய 6 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இதேபோல் பிரிவு சி-யில், உமேஷ் யாதவ், ஷிகர் தவான், ஷர்துல் தாக்கூர், இஷன் கிஷன், தீபக் ஹூடா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ்.பரத் உள்ளிட்ட 11 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்

பிரிவு ஏ+ ( ரூ. 7 கோடி): ரோகித் ஷர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா.

பிரிவு ஏ (ரூ. 5 கோடி): ஹர்த்திக் பாண்ட்யா, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, ரிஷப் பண்ட், அக்சர் பட்டேல்.

பிரிவு பி (ரூ. 3 கோடி): செத்தேஷ்வர் புஜாரா, கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் அய்யர், முகமது சிராஜ், சூர்யகுமார் யாதவ், சுப்மன கில்.

பிரிவு சி (ரூ. 1 கோடி): உமேஷ் யாதவ், ஷிகர் தவான், ஷர்துல் தாக்கூர், இஷன் கிஷன், தீபக் ஹூடா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ் பரத்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Cricket bcci annual contract list in tamil

Exit mobile version