Advertisment

பென் ஸ்டோக்ஸ் கேப்டனா? டோனி கூறியது என்ன? சி.எஸ்.கே நிர்வாகி கொடுத்த முக்கிய அப்டேட்

சி.எஸ்.கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாத், ஸ்டோக்ஸ் அணியில் இணைந்தது குறித்தும், கேப்டன் பிரச்சினையில் அவரது மௌனத்தையும் உடைத்துள்ளார்.

author-image
WebDesk
Dec 24, 2022 15:16 IST
Cricket, CSK CEO Kasi reveals Dhoni's reaction at Ben Stokes Tamil News

CSK CEO Kasi Viswanath reveals MS Dhoni's reaction at Ben Stokes' joining, breaks silence on captaincy for IPL 2023 Tamil News

News about CSK, Ben Stokes, MS Dhoni in tamil: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி 10 அணிகள் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துக் கொண்டன. 85 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்ட வீரர்களுக்குரிய இடத்தை நிரப்புவதற்காக ஐ.பி.எல். வீரர்களுக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.

Advertisment

இந்த ஏலத்தில் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் சாம் கர்ரனை பஞ்சாப் கிங்ஸ் அணி 18.50 கோடிக்கு வாங்கியது. இதன் மூலம் ஐ.பி.எல். ஏல வரலாற்றில் அதிக தொகை கொடுத்து வாங்கப்பாட்ட வீரர் ஆனார் சாம் கர்ரன். முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரான அவரை வசப்படுத்த சென்னை 3 கோடி வரை ஏலம் கேட்டது. ஆனால், அவருக்கு இருந்த கிராக்கியால் சென்னை அணி நழுவ விட்டது.

இருப்பினும், நான்கு முறை சாம்பியனான சென்னை அணி இங்கிலாந்து ஆல்ரவுண்டர் வீரர் பென் ஸ்டோக்ஸை 16.25 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியது. தற்போது இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்து அவரை சென்னை அணி வாங்கிய சில நிமிடங்களிலேயே, தோனிக்கு பதிலாக ஸ்டோக்ஸ் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டாரா என்று நிபுணர்கள் மற்றும் ரசிகர்கள் ஆச்சரியப்பட தொடங்கினர்.

சி.எஸ்.கே நிர்வாகி கொடுத்த முக்கிய அப்டேட்

இந்நிலையில், சென்னை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாத், ஸ்டோக்ஸ் அணியில் இணைந்தது குறித்தும், கேப்டன் பிரச்சினையில் அவரது மௌனத்தையும் உடைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், "ஸ்டோக்ஸைப் பெறுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். அவரது பெயர் இறுதியில் வந்ததில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். எங்களுக்கு ஒரு ஆல்ரவுண்டர் தேவை. அதனால் எங்களுக்கு ஸ்டோக்ஸ் கிடைத்ததில் எம்எஸ் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

கேப்டன்சி விருப்பம் உள்ளது. ஆனால் அது குறித்த முடிவை தோனி (எம்எஸ்) சரியான நேரத்தில் எடுப்பார். கைல் ஜேமிசனின் காயம் காரணமாக, அவர் மீது பலரும் விருப்பம் காட்டவில்லை. ஃப்ளெமிங்கிடம் இருந்து அவர் குணமடைந்து விட்டார். மற்றும் ஆட தயாராக இருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. சி.எஸ்.கே அணி பிரகாசமாக இருக்கிறது. இந்த சீசனில் நாங்கள் நன்றாக விளையாடுவோம் என்று நம்புகிறேன். எங்களது செயல்முறையை நாங்கள் எப்போதும் பின்பற்றுவோம். அது எங்களுக்கு நிச்சயம் உதவும். " என்று அவர் கூறியுள்ளார்.

ஐபிஎல் 2022 சீசன் தொடங்குவதற்கு முன்பு தோனி கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார். ஆனால், ஜடேஜா அழுத்தத்தின் கீழ் போராடினார். இதனால், இரண்டாவது பாதியில் கேப்டன் பொறுப்பை தோனியிடம் ஒப்படைத்தார் ஜடேஜா. அதனால் தோனி கேப்டன் பொறுப்பையும் ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இங்கிலாந்து ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் அணியின் கேப்டனாக நல்ல பார்மில் இருக்கிறார். அவர் தலைமையிலான அணி 10 டெஸ்டில் 9ல் வெற்றி பெற்றுள்ளது குறிபிடத்தக்கது.

publive-image

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

#Ben Stokes #Cricket #Sports #Chennai #Ms Dhoni #Chennai Super Kings #Ipl Auction #Ipl News #Ipl Cricket #Ipl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment