Womens Premier League 2023 Tamil News: முதலாவது மகளிர் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் மும்பையில் இன்று (சனிக்கிழமை) தொடங்கி வருகிற 26ம் தேதி வரை நடக்கிறது. மும்பை பிரபோர்ன் ஸ்டேடியம் மற்றும் நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் ஆகிய இரு மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், யு.பி வாரியர்ஸ் என மொத்தம் 5 அணிகள் களமாடுகின்றன. இந்த அணிகளில் மொத்தம் 87 வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் 30 பேர் வெளிநாட்டு வீராங்கனைகளாக உள்ளனர்.
இந்த தொடரில் நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் கோலாகலமாக அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மோதுகின்றன. முன்னதாக தொடக்க விழாவையொட்டி கண்கவர் கலைநிகழ்ச்சி நடக்கிறது. தற்போதைக்கு இந்த போட்டியைக் காண வரும் பெண்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கான டிக்கெட் குறைந்தபட்சமாக ரூ.100 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மகளிர் பிரிமீயர் லீக் 2023: களமாடும் முன்னணி வீராங்கனைகளின் பின்னணி
26 வயதில் இரண்டு வயது குழந்தையின் தாயான டெல்லி
ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் வீராங்கனையும், டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனும், 32 வயதான மெக் லானிங்கும் தொடரில் களமாடுகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்டில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதற்காக தனது அணியை வழிநடத்திய பின்னர் விளையாட்டிலிருந்து விலகினார். அவர் தனது நேரத்தை பயணத்திலும், ஓட்டலில் “காபி தயாரித்தல் மற்றும் பாத்திரங்களைக் கழுவுதல்” வேலையைக் கூட செய்தார்.
மெக் லானிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் நடந்த மகளிர் டி 20 உலகப் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்றது. இது அவருக்கு ஐந்தாவது உலகக் கோப்பை வெற்றியாகும். டி20 களில் நான்கும் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஒன்றையும் அவர் பெற்றுள்ளார்.
சமீபத்தில் தனது மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் கவனம் செலுத்த ஓய்வு எடுத்த இங்கிலாந்தின் நாட் ஸ்கிவர்-ப்ரன்ட் (30), மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுகிறார். டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்தின் துணைக் கேப்டனாக இருந்த இடைவேளையில் இருந்து திரும்பிய அவர், போட்டியில் இரண்டாவது அதிக ரன் எடுத்த வீராங்கனையாக இருந்தார்.
ரூ. 951 கோடி ஒளிபரப்பு ஒப்பந்தம் கொண்ட ஐ.பி.எல் போன்ற லீக்கில், மொத்தம் ரூ. 4,670 கோடியுடன், ஐந்து அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 100 இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்களில் இந்தப் பெண்களும் அடங்குவர்.
இத்தொடர் தனது கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றும் என்றும், நாட்டின் விளையாட்டின் தரத்தை உயர்த்தும் என்று கணித்துள்ளார் இந்தியா மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர். “நாங்களும் சில நல்ல திறமைகளைப் பெறப் போகிறோம். இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான வேறுபாடு குறையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று கடந்த மாதம் நடந்த உலக டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியாவின் அரையிறுதி தோல்வியில் அதிரடியாக விளையாடிய அவர் கூறியிருந்தார்.
“பெண்கள் கிரிக்கெட்டில் நிறைய மாறும். அதில் இருந்து பல சூப்பர் ஸ்டார்கள் வெளிவருவதை நீங்கள் காண்பீர்கள். இதற்காக நாங்கள் நீண்ட காலம் காத்திருந்தோம்.” என்று டெல்லி கேபிடல்ஸ் அணியின் முன்னணி பேட்ஸ்வுமனான ஜெமிமா ரோட்ரிக்ஸ் கூறினார்.
கிரிக்கெட்டுக்கு “ஓகே” சொன்ன சில பெற்றோர்களில் ஹரியானாவின் ஷஃபாலி வர்மாவின் பெற்றோர்களும் ஆவர். ஷஃபாலி வர்மா சிறுவனாக இருந்ததால், உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்காக அவரது தலைமுடியை வெட்டினர். இந்தியாவுக்காக மிகவும் இளம் வயதில் விளையாடிய வீரர் / வீராங்கனைகள் பட்டியலில் அவர் தான் முதலிடத்தில் உள்ளார். இவரது தலைமையிலான இந்தியா U-19 மகளிர் உலகக் கோப்பையை வென்றது.
டெல்லி கேபிடல்ஸில், ஷஃபாலியின் தொடக்க ஜோடியாக சினேகாவாக இருக்கலாம். அவர் ஆர்.சி.பி கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்து இந்திய அணியில் அறிமுகமானார். சினேகாவின் கிரிக்கெட் வாழ்க்கை சரியாக தொடங்கவில்லை, மேலும் அவர் 22 வயதில் திருமணம் செய்து கொண்டார். அவர் இப்போது உள்நாட்டு சுற்றுக்கு வெற்றிகரமாக திரும்பியுள்ளார். டெல்லி அணியால் ரூ. 30 லட்சத்திற்கு வாங்கப்பட்ட அவர், இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பதில் உறுதிபூண்டுள்ளார்.
டெல்லி கேபிடல்ஸின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட உணர்ச்சிகரமான வீடியோவில், சினேகா தனது மகளை வீட்டில் விட்டுச் செல்வதற்கான கவலையைப் பற்றி பேசினார். “நான் போகும் போது அவள் அழ ஆரம்பித்தாள். நான் போகலாமா என்று யோசித்தேன். இது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் என் கணவர் என்னை போகச் சொன்னார்… எனது ஹோட்டல் அறைக்குள் நுழைந்த சில நிமிடங்களில், நான் அவளைப் பற்றி கேட்க என் கணவரை அழைத்தேன். அப்போது அவள் தெலுங்கில், ‘பாகா ஆடு’, அதாவது ‘அங்கே நன்றாக விளையாடு’ என்று கூறினாள்.” என்று அவர் அந்த வீடியோ கிளிப்பில் கூறுகிறார்.
சில வீராங்கனைகளுக்கு மகளிர் பிரிமீயர் லீக் என்பது தங்களுடன் இல்லாத தங்களது அன்புக்குரியவர்களை நினைவில் வைத்துக்கொள்ளும் தருணமாக மாறியுள்ளது. “நான் அவரை எவ்வளவு மிஸ் செய்கிறேன் என்பதை என்னால் திரும்பத் திரும்பச் சொல்ல முடியாது” என்று குஜராத்
2019 ஆம் ஆண்டு தனது தாயை இழந்த, தனது 21 வயதில் விளையாட்டை கைவிட முடிவு செய்ததாக இந்திய அணி வீராங்கனையும் யு.பி வாரியர்ஸ் ஆல்ரவுண்டருமான தேவிகா வைத்யா கூறினார். கொரோனா லாக்டவுன் எனது எதிர்காலத்தை மறுபரிசீலனை செய்ய வைத்தது. என் அம்மா எப்போதும் அங்கே இருப்பதை நான் உணர்ந்தேன் – நான் விளையாடினாலும், விளையாடாமல், அழாமல், சிரித்தாலும், போட்டிகளில் வென்றாலும் – அவள் எப்போதும் என்னுடன் இருப்பாள். இப்போது நான் அந்த உண்மையை ஏற்றுக்கொண்டதால், அதைச் சமாளிப்பது எனக்கு எளிதாக இருக்கிறது, ”என்று அவர் கூறினார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil