/indian-express-tamil/media/media_files/2025/04/10/rlIG7XjlbvHQMePxpEua.jpg)
128 ஆண்டுக்கு பிறகு கிரிக்கெட் மீண்டும் ஒலிம்பிக்கில் இடம் பெற்றவுள்ள நிலையில், தங்கப் பதக்கத்திற்காக ஆறு அணிகள் மட்டுமே போட்டி போடும் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது .
34-வது ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெறுகிறது. இதில் கிரிக்கெட் (இருபாலருக்கும் டி20), ஸ்குவாஷ், பேஸ்பால்-சாப்ட்பால் மற்றும் அமெரிக்காவில் புகழ்பெற்ற பிளாக் கால்பந்து, லாக்ரோஸ் ஆகிய விளையாட்டுகளை புதிதாக சேர்க்க லாஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் கமிட்டி பரிந்துரைத்தது. அதற்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐ.ஓ.சி.) செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Cricket in 2028 Olympics: Organisers confirm six teams to participate at LA Games
கிரிக்கெட் 1900-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் மட்டும் இடம் பெற்றது. அதில் இங்கிலாந்து அணி பிரான்சை தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றது. அதன் பிறகு கழற்றிவிடப்பட்ட கிரிக்கெட் தற்போது 128 ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஒலிம்பிக்கில் கால்பதிக்கிறது.
128 ஆண்டுக்கு பிறகு கிரிக்கெட் மீண்டும் ஒலிம்பிக்கில் இடம் பெற்றவுள்ள நிலையில், தங்கப் பதக்கத்திற்காக ஆறு அணிகள் மட்டுமே போட்டி போடும் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது . அதாவது, இந்த ஒலிம்பிக்கில் 6 கிரிக்கெட் அணிகள் மட்டுமே பங்கேற்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போட்டி ஏற்பாட்டாளர்கள் புதன்கிழமை பேசுகையில், லாஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டி டி20 ஃபார்மெட்டில் நடத்தப்படும் என்றும் , இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளிலும் ஆறு அணிகள் போட்டியிடும். இதன் விளைவாக, ஒவ்வொரு பாலினத்திற்கும் 90 வீரர் ஒதுக்கீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் ஒவ்வொரு அணியும் 15 பேர் கொண்ட அணியை கொண்டு வர அனுமதிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்கள்.
2028 விளையாட்டுப் போட்டிகளுக்கான கிரிக்கெட் போட்டிக்கான தகுதி அளவுகோல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) கீழ் 12 முழு உறுப்பினர் நாடுகள் உள்ளன, மேலும் 90-க்கும் மேற்பட்ட நாடுகள் டி20 போட்டி விளையாடும் இணை உறுப்பினர்களாக உள்ளன. அமெரிக்கா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் நேரடி இடத்தைப் பெற வாய்ப்புள்ளதால், தகுதிச் செயல்முறை மூலம் ஐந்து அணிகள் மட்டுமே விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.