மீண்டும் உலக சாம்பியன்! – 85 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி., வெற்றி

Womens T20 World cup cricket : பெண்கள் உலககோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், இந்திய அணி வெற்றி பெற்று முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பெண்கள் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா 85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று 5வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.

மெல்பர்னில் இன்று நடைபெற்ற மகளிர் டி 20 உலகக் கோப்பை கிரிகெட் போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் தேர்ந்தெடுத்துக் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்திருந்தது. இந்த நிலையில், அடுத்து களமிறங்கிய இந்திய அணி, தொடக்கம் முதலே ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சுக்கு திணறியது. இறுதியில் 19.1 ஓவரில் 99 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்தியா தோல்வியடைந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

15:45 (IST)08 Mar 2020
ஆஸ்திரேலியா சாம்பியன்

மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 5வது முறையாக சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா

மெல்பர்னில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 85 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி.

15:32 (IST)08 Mar 2020
97-9

18.1வது ஓவரின் முடிவில், இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்துள்ளது. 

15:04 (IST)08 Mar 2020
வேதா கிருஷ்ணமூர்த்தி அவுட்

24 பந்துகளை சந்தித்த வேதா 19 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேற, இந்தியா தனது ஐந்தாவது விக்கெட்டை பறிகொடுத்தது.

14:49 (IST)08 Mar 2020
39-4

இந்திய அணியின் ஷஃபாளி வெர்மா 2 ரன்களிலும் ஸ்ம்ரிதி மந்தனா 11 ரன்களிலும் வெளியேறினர். ரோட்ரிக்ஸ் 0 ரன்னிலும், கேப்டன் கவுர் 4 ரன்களிலும் அவுட்டாக, இந்தியா 8 ஓவர்களில் 39 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்துள்ளது.

13:57 (IST)08 Mar 2020
185 ரன்கள் இலக்கு

ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக, மூனே 78 ரன்களும், ஹீலே 75 ரன்களும் எடுத்தனர்.

13:45 (IST)08 Mar 2020
அடுத்தடுத்து 2 விக்கெட்....

இந்திய ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் மொமன்ட்...

தீப்தி வீசிய 17வது ஓவரில் கேப்டன் லேனிங் 16 ரன்களில் கேட்ச் ஆக, கார்ட்னர் 2 ரன்களில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார்.

ஆஸி., 17 ஓவர்களில் 157-3

13:21 (IST)08 Mar 2020
75(39)

ஹீலே எனும் ரன் ராட்சஸி ஒருவழியாக, 39 பந்துகளில் 75 ரன்கள் விளாசித் தள்ளி, நமது வீராங்கனைகளைக்கு நாக்கு தள்ளி, இப்போது அவுட்டாகி இருக்கிறார். இதுவும், அவர் 'எனக்கு ஜூஸ் குடிக்கணும்; போயிட்டு வரேன்' என்று சொல்வது போல் தான் இருந்தது.

13:11 (IST)08 Mar 2020
இறுதிப் போட்டிக்கு ஒரு மரியாதை வேண்டாமா?

ஹீலே 30 பந்துகளில், தனது அரைசதத்தை கடந்தார். ஆஸி., வீராங்கனைகள், இதை ஒரு இறுதிப் போட்டியகாவே மதிக்கவில்லை என்பது அவர்களது பேட்டிங்கில் தெரிகிறது. 

ஒரு பந்தை கூட நின்று அடிக்க அவர்கள் விரும்பவில்லை. எல்லாமே இறங்கி வந்து அடித்தல் தான்!!!

12:57 (IST)08 Mar 2020
50-0

ஆறு ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்துள்ளது. 6.1 வது ஓவரில் 50 ரன்களைக் கடந்து, இந்திய பவுலர்களுக்கு அச்சுறுத்தல் கொடுத்து வருகிறது பெத் மூனி, அலிசா ஹீலே பார்ட்னர்ஷிப்.

12:34 (IST)08 Mar 2020
பெத் மூனி, அலிசா ஹீலே ஓப்பனிங்

பெத் மூனி, அலிசா ஹீலே ஆஸ்திரேலிய தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கியுள்ளனர். 

தீப்தி ஷர்மா, தனது முதல் ஓவரை வீசினார்.

12:05 (IST)08 Mar 2020
ஆஸி., பேட்டிங்

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லேனிங் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். 

11:45 (IST)08 Mar 2020
ஷபாலியின் அதிரடியை நம்பி இந்தியா

தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதால், இந்திய வீராங்கனைகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.  9 சிக்சருடன் மொத்தம் 161 ரன்கள் (29, 39, 46, 47 ரன்) சேர்த்துள்ள ஷபாலியின் அதிரடியைத் தான் இந்தியா அதிகமாக சார்ந்து இருக்கிறது. மற்றொரு தொடக்க வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா ஓரளவு நல்ல நிலையில் உள்ளார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரின் (4 ஆட்டத்தில் 26 ரன்) தடுமாற்றம் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அவரும் ஜொலித்தால் பேட்டிங் வரிசை மேலும் பலப்படும். இன்று ஹர்மன்பிரீத் கவுருக்கு பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

11:43 (IST)08 Mar 2020
சாதிக்குமா இந்தியா?

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, இந்த தொடரில் தோல்வி பக்கமே செல்லாத ஒரே அணியாகும். லீக் சுற்றில் 4 ஆட்டங்களிலும் வெற்றிகளை வாரி குவித்த இந்திய அணி அரைஇறுதியில் இங்கிலாந்தை சந்திக்க இருந்தது. அந்த ஆட்டம் மழையால் ரத்தானதால் லீக் சுற்றில் முதலிடம் பிடித்த வகையில் இந்திய அணி முதல் முறையாக இறுதிசுற்றை எட்டியது.

Web Title:

Cricket india vs australia womens t20 world cup final live score

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close