Advertisment

Ind vs SL 1st ODI: ஒரு நாள் போட்டி அணியில் சூர்ய குமாருக்கு எந்த இடம்? பிளேயிங் லெவனுக்கு கடும் போட்டி

கேப்டன் ரோகித்துடன் சுப்மான் கில் தொடக்க வீரராக களமாடுவார். விராட் கோலி வழக்கம் போல் அவரது இடமான 3ல் இறங்குவார்.

author-image
WebDesk
New Update
cricket - India vs Sri Lanka 1st ODI, Playing XI in tamil

All three of Virat Kohli, Rohit Sharma and KL Rahul are expected to walk straight into the playing XI for the first ODI vs SL in Guwahati. (AP and BCCI)

IND vs SL 1st ODI: Predicted playing XI tamil news: இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இவ்விரு அணிகள் மோதிய 3 போட்டிகொண்ட டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் நடக்கிறது.

Advertisment

அதன்படி, இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நாளை நடக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியை வழக்கம் போல் கேப்டன் ரோகித் சர்மா வழிநடத்துகிறார். அவர் காயம் காரணமாக வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் சமீபத்தில் முடிவடைந்த இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவில்லை.

ஒருநாள் உலகக் கோப்பை இந்திய மண்ணில் அரங்கேற இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், இலங்கைக்கு எதிரான தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் தொடங்குமா? என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரில் முன்னாள் கேப்டன் விராட் கோலி, கேஎல் ராகுல் அணிக்கு திரும்பி உள்ளனர்

கேப்டன் ரோகித்துடன் சுப்மான் கில் தொடக்க வீரராக களமாடுவார். விராட் கோலி வழக்கம் போல் அவரது இடமான 3ல் இறங்குவார். அணியில் ரிஷப் பண்ட் இல்லாததால் மிடில் ஆர்டரில் கேஎல் ராகுல் வருவார். மிடில்-ஆடரில் சூரியகுமார் யாதவும் இருப்பதால், கோலிக்கு அடுத்ததாக அவரே களமாட அதிக வாய்ப்புள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு வேகப்பந்து வீரர் பும்ரா இந்த அணியில் இடம் பெற்றிருந்த நிலையில், அவர் தொடரில் இருந்து திடீரென நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், ஒருநாள் தொடருக்கு முன்னதாக கவுகாத்தியில் அணியில் சேர இருந்த பும்ரா, பந்துவீச்சை வலுப்படுத்த இன்னும் சிறிது காலம் தேவைப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அகில இந்திய மூத்த தேர்வுக் குழு ஜஸ்பிரித் பும்ராவுக்கு மாற்றாக யாரையும் அணியில் சேர்க்கவில்லை." என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொந்த மண்ணில் வருகிற பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கவுள்ள நிலையில், அதை மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம். செப்டம்பர் 2022க்குப் பிறகு முதன்முறையாக இந்திய அணியில் பும்ரா சேர்க்கப்பட்டார், அவர் தொடர்ச்சியான முதுகு காயத்தால் 2022 டி 20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பும்ராவுக்கு பதில் முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் மற்றும் உம்ரான் மாலிக் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா செல்ல வாய்ப்புள்ளது.

IND vs SL: இரு அணி உத்தேச வீரர்கள் பட்டியல்:

இந்தியா:

ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

இலங்கை:

பாத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனக (கேப்டன்), சாமிக்க கருணாரத்னே, வனிந்து ஹசரங்க, தில்ஷன் மதுஷங்க, மஹீஷ் தீக்ஷனா, லஹிரு குமார.

IND vs SL: இரு அணி வீரர்கள் பட்டியல்:

இந்தியா:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், அக்சர் படேல், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்

இலங்கை:

பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனக (கேப்டன்), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்னே, மஹீஷ் தீக்ஷன, தில்ஷன் மதுஷங்க, லஹிரு குமார, அஷேன் பண்டார, நுவா, பிரமோத் பண்டார, நுவா மதுஷன், துனித் வெல்லலகே, கசுன் ராஜித, ஜெப்ரி வான்டர்சே, சதீர சமரவிக்ரம.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Sports Rohit Sharma Cricket Indian Cricket Team Indian Cricket India Vs Srilanka Suryakumar Yadav India Vs Sl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment