India squad for Sri Lanka T20 series 2023 Tamil News: இந்தியா வருகை தரும் இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டி-20 போட்டி வருகிற ஜனவரி 3 ஆம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கிறது.
இந்நிலையில், இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. அதன்படி, டி20 போட்டிக்கான இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாகவும், அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அத்துடன் ஐ.பி.எல். ஏலத்தில் கோடிகளில் விலை போன இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷிவம் மாவி, முகேஷ்குமார் ஆகியோர் புதுமுக வீரர்களாக களமாட உள்ளனர்.
இலங்கைக்கு எதிரான இரண்டு இந்திய அணிகளில் இருந்தும் விக்கெட் கீப்பர் வீரர் ரிஷப் பண்ட் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். பண்ட் காயத்தால் வெளியேறியதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டாலும், அவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து விலகுவதற்கான அதிகாரப்பூர்வ காரணத்தை பிசிசிஐ தெரிவிக்கவில்லை.
மேலும், ஒருநாள் தொடரில் இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியாவும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மீண்டும், இது நீண்ட கால ஏற்பாடா அல்லது இலங்கை தொடருக்கானதா என்பது குறித்து பிசிசிஐ எந்த அதிகாரப்பூர்வ உறுதியையும் அளிக்கவில்லை. இதேபோல், விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுலுடன் ரோகித்தும் டி20 அணியில் இடம்பெறவில்லை. இது குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறவில்லை என்றாலும், 2024 டி 20 உலகக் கோப்பையை மனதில் கொண்டு இந்தியா இளம் வீரர்கள் கொண்ட அணியை உருவாக்க விரும்புவதால், இந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் டி 20 அணிக்கு திரும்ப மாட்டார்கள் என்று தெரிகிறது.
சர்வதேச அரங்கில் முன்னெப்போதும் இல்லாத வகையில் முன்னேறிய சூர்யகுமார் யாதவ், இலங்கைக்கு எதிரான டி20 போட்டிகளுக்கு துணை கேப்டனாகவும், பாண்டியா ஒருநாள் போட்டிகளுக்கான துணை கேப்டனாகவும் உள்ளனர். அதேநேரத்தில் வங்கதேச தொடரில் மோசமாக ஆடிய 37 வயதான ஷிகர் தவான் கழற்றிவிடப்பட்டுள்ளார். சஞ்சு சாம்சன் டி20 அணியில் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளார்.
ரசிகர்கள் கருத்து
இலங்கை தொடர்களுக்கு எதிரான இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டது குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவை குறித்து இங்கு பார்க்கலாம்.
இலங்கைக்கு எதிரான இந்திய டி20 அணிக்கு கேப்டனாக ஹார்திக் பாண்டியனை நியமித்து குறித்து சில ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.
India's T20I captain and ODI vice-captain!
Hardik Pandya 🔥#HardikPandya #INDvSL pic.twitter.com/LyqVs8WAwz— Cricket Master (@Master__Cricket) December 28, 2022
Captain Hardik Pandya is back! pic.twitter.com/IscldNroC3
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 27, 2022
ஒரு ரசிகர் தனது ட்விட்டர் பதிவில், "டி20 போட்டிகளில் இருந்து ஸ்ரேயாசையும் வெளியேற்றியது நல்லது. கில், ருதுராஜ், கெய்க்வாட், திரிபாதி, ஹூடா மற்றும் ஸ்கை ஆகியவற்றில் முதல் 3 இடங்களில் பேட் செய்யக்கூடிய 6 வீரர்கள் இந்தியாவிடம் உள்ளனர். டி20 அணியில் இடம் பெற கில் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கிறேன். அவர் இந்தியாவுக்காக விளையாடுவதற்கு முன் ஐபிஎல்லில் தனது ஸ்ட்ரைக் ரேட்டை உயர்த்த வேண்டும்." என்று பதிவிட்டுள்ளார்.
Good call to leave out Shreyas as well from T20Is. India have 6 players who can bat in the Top 3 in Gill, Ruturaj, Gaikwad, Tripathi, Hooda and SKY. Think Gill has been lucky to make the T20 squad. He needs to up his PP strike rate in IPL first before he plays for India.
— Gurkirat Singh Gill (@gurkiratsgill) December 27, 2022
மற்றொரு ரசிகர், "இந்திய ஒருநாள் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கம்? மோசமான முடிவு" என்று பதிவிட்டுள்ளார். இன்னொரு ரசிகர், பிசிசிஐ தேர்வுக்குழு வீரர்களை போதையில் தேர்வு செய்கிறதா?, ஒருநாள் போட்டிகளில் கேஎல் ராகுலுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று நினைக்கவில்லையா?
ரவீந்திர ஜடேஜா உடல்தகுதியுடன் இருக்கும் போது அவரைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும், தேசிய அணியை குப்பையில் போடாதீர்கள், தோல்விகளில் மீளுங்கள், உலகக் கோப்பை நெருங்கிவிட்டது." என்று கூறி கேள்விகளை எழுப்பியுள்ளார்.
Sanju Samson dropped from the India ODI squad? Horrible move. #INDvSL
— Farid Khan (@_FaridKhan) December 27, 2022
Does the BCCI selection committee select players while intoxicated?, don't you think Sanju Samson should have replaced KL Rahul in ODIs.
Ravindra Jadeja should have been selected when he is fit, Don't trash the national team, take out the flops, world cup is near. #INDvSL pic.twitter.com/7DtfZaQjmc— Deepa 🇮🇳 (@Deepa_Gurukkal) December 27, 2022
மற்றொரு ரசிகர், "பல கேள்விகளுடன் இரவு 10.14 மணிக்கு அறிவிக்கப்பட்ட அணி குறித்து செய்திக்குறிப்பில் ஒரு விளக்கமும் இல்லை. மருத்துவ குறிப்பு இல்லை, யார் கைவிடப்பட்டார், யார் ஓய்வெடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. ரிஷப் பண்டுடன் என்ன ஒப்பந்தம் என்று தெரியவில்லை.
2022 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டுக்கு பொருத்தமான குறிப்பில் முடிவடைகிறது." என்று பதிவிட்டுள்ளார்.
Squads announced at 10.14 pm with so many questions and not a single explanation in the press release. No medical note, no idea who is dropped and who is rested. No idea what the deal with Rishabh Pant is.
2022 ending on a fitting note for Indian cricket.— Vinayakk (@vinayakkm) December 27, 2022
இன்னொரு ரசிகர் தனது ட்விட்டர் பதிவில், "ரவி பிஷ்னோய் குறைந்தபட்சம் டி20 அணியில் இடம் பெற்றிருக்க வேண்டும். வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் அந்த வீரர் இந்தியாவுக்கு நன்றாகவே விளையாடி இருந்தார்." என்று குறிப்பிட்டுள்ளார்.
Ravi Bishnoi should have been in the T20I squad at least. That bloke delivered well for India whenever he got the chance.
— Shivani Shukla (@iShivani_Shukla) December 27, 2022
இலங்கை - டி20 போட்டிகளுக்கான இந்திய அணி:
ஹர்திக் பாண்டியா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் படேல். சிங், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், சிவம் மாவி, முகேஷ் குமார்.
இலங்கை - ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணைகேப்டன்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப். யாதவ், அக்சர் படேல், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.