இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டம்:
நியூஸி. மகளிர் அணி வெற்றி
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய மகளிர் கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. இதில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டி நேற்று குயின்ஸ்டவுனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக, முதலாவதாக களமிறங்கிய சுசி பேட்ஸ் 111 பந்துகளில் 106 ரன்கள் எடுத்தார். எமி 67 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து நியூசிலாந்து அணி 275 ரன்கள் எடுத்தது.
இந்தியா சார்பில் கோஸ்வாமி, பூஜா வஸ்த்ரகர், கயக்வாட், தீப்தி ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பூணம் யாதவ் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
இதையடுத்து, 276 ரன்கள் இலக்குடன் பேட்டிங் செய்த இந்திய அணி 49.4 ஓவர்கள் முடிவில் 213 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதையடுத்து 62 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி முதலாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக மிதாலி ராஜ் 73 பந்துகளில் 59 ரன்களும் யஸ்திகா பட்டியா 63 பந்துகளில் 41 ரன்களும் எடுத்திருந்தனர்.
நியூஸிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜெஸ் கெர் 4 விக்கெட்டுகளையும் ஹேலி ஜென்சன்
நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி வருகிற 15-ஆம் தேதி குயின்ஸ்டவுனில் நடைபெற உள்ளது.
கிளப் உலகக் கோப்பை: முதல்முறையாக வெற்றி பெற்ற செல்சீ
கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் செல்சீ அணி முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது.
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பால் (ஃபிபா) நடத்தப்படும் கிளப் உலகக் கோப்பை போட்டியில் செல்சீ அணி, பால்மிராஸ் அணியை எதிர்கொண்டது.
இதில் 2-1 என்ற கோல் கணக்கில் செல்சீ அணி வெற்றி பெற்றது.
செல்சீ அணியின் வீரர் ரோமேலு லுகாகு 54ஆவது நிமிடத்தில் கோல் பதிவு செய்தார். பின்னர், பதிலடியாக பால்மிராஸ் அணியின் வீரர் ரபேல் வெய்கா 64 ஆவது நிமிடத்தில் கோல் பதிவு செய்தார்.
அபு தாபியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கால்பந்தை அதிக நேரம் செல்சீ அணி தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
ஆட்டநேர முடிவில் தலா 1 கோலுடன் அணிகள் இருந்ததால் வெற்றியைத் தீர்மானிப்பதற்காக கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அப்போது பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி செல்சீ அணியின் வீரர் ஹாவெர்ட்ஸ் கோல் பதிவு செய்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஐரோப்பாவில் சாம்பியனாக இருந்தோம். இப்போது உலகின் சிறந்த கிளப் அணி சாம்பியனாகி இருக்கிறோம். பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தியபோது மிகவும் பதற்றமாக உணர்ந்தேன். இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
மான்செஸ்டர் யுனைடட் மற்றும் லிவர்பூல் அணிகளுக்கு பிறகு உலக சாம்பியனான மூன்றாவது இங்கிலாந்து கிளப் அணி என்ற பெருமையையும் செல்சீ பெற்றுள்ளது.
ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் கிளப் அணி இதுவரை 4 முறை இந்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஞ்சிக் கோப்பை தொடர்: மகாராஷ்டிரா
அணியில் இந்திய யு-19 வீரர்கள்
19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணியில் இடம்பெற்ற விக்கி ஓத்வால் மற்றும் கெளஷால் தம்பே ஆகியோர் ரஞ்சிக் கோப்பை தொடருக்காக மகாராஷ்டிர அணியில் விளையாடவுள்ளனர்.
விக்கி ஓஸ்த்வால் யு-19 உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக பந்து வீசினார். கெளஷால் தம்பே சுழற்பந்து வீச்சுடன் அடித்து ஆடக் கூடிய ஆட்டக்காரர்.
மகாராஷ்டிர மாநிலம், லோனாவாலாவில் ஓஸ்த்வால் பிறந்தார். தற்போது புணே புறநகர்ப் பகுதியில் வசித்து வருகிறார். கெளஷால் புணேவைச் சேர்ந்தவர் ஆவார். காவல் துறை உயரதிகாரியின் மகன்.
ரஞ்சி கோப்பை தொடரில் மகாராஷ்டிரா அணி எலைட் ஜி பிரிவில் இடம்பெற்றுள்ளது. ஹரியாணாவில் பிப்ரவரி 17-ஆம் தேதி மகாராஷ்டிர அணி விளையாடவுள்ளது.
மகாராஷ்டிர அணியின் கேப்டனாக அங்கீத் பாவனே நியமிக்கப்பட்டுள்ளார்.
ருதுராஜ் கெய்க்வாட் மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடத் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் ரஞ்சிக் கோப்பையில் அவரால் விளையாட முடியவில்லை என்று மகாராஷ்டிரர கிரிக்கெட் சங்கம் தெரிவித்தது.
ஐபிஎல் ஏலத்தை நடத்தியவர் திடீரென மயங்கியதால் பரபரப்பு
ஐபிஎல் முதல் நாள் ஏலத்தை நடத்திய ஹியூக் எட்மீட்ஸ் திடீரென மயங்கி விழுந்தார்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கை வீரர் வனின்டு ஹசரங்காவை ஏலத்தில் எடுக்கும் செயல்முறை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அவர் மயங்கி விழுந்தார்.
இதையடுத்து மருத்துவர்களை அவரை சோதித்தனர். அவருக்கு ரத்த குறைந்ததால் மயங்கி விழுந்தது தெரியவந்தது.
கியூக்கை பிசிசிஐ நிர்வாகம் கடந்த 2018ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலம் நடத்த நியமித்தது.
ஐஎஸ்எல் கால்பந்து : ஒடிசா-மும்பை அணிகள் இன்று மோதல்
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.
இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை -ஒடிசா அணிகள் மோதுகின்றன.
மும்பை அணி 14 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி ,4 டிரா ,4 தோல்வி என புள்ளி பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது .ஒடிசா அணி விளையாடிய 15 போட்டிகளில் 6 வெற்றி,3 டிரா, 6 தோல்வி என புள்ளிப் பட்டியலில் 7 ஆவது இடத்தில் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.