/tamil-ie/media/media_files/uploads/2023/02/tamil-indian-express-2023-02-17T173128.043.jpg)
India vs Australia, 2nd Test, Ravindra Jadeja Becomes Fastest Indian to Pick 250 Wickets and Score 2500 Runs in Test Cricket
IND vs AUS 2nd Test, Ravindra Jadeja Tamil News: இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அந்த அணியில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 81 ரன்களும், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 72 ரன்களும் எடுத்தனர்.
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 78.4 ஓவர்களில் 263 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷமி 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். தற்போது, இந்திய அணி முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.
Innings Break!
Australia are all out for 263 in the first innings.
4️⃣ wickets for @MdShami11 👌🏻
3️⃣ wickets apiece for @ashwinravi99 & @imjadeja 👍🏻
Scorecard ▶️ https://t.co/hQpFkyZGW8#TeamIndia | #INDvAUSpic.twitter.com/RZvGJjsMvo— BCCI (@BCCI) February 17, 2023
இம்ரான் கான், கபில்தேவை முந்திய ஜடேஜா: ஆல்ரவுண்டராக புதிய சாதனை
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டியில் 250 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்கிற சாதனை படைத்துள்ளார். மேலும், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 2,500 ரன்கள் மற்றும் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தான் ஜாம்பவான் வீரர் இம்ரான் கான் மற்றும் இந்திய ஜாம்பவான் வீரர் கபில்தேவ் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி, 2வது இடத்தை பிடித்து புதிய சாதனை படைத்துள்ளார் ஜடேஜா. இந்த சாதனையை அவர் தனது 62வது டெஸ்டில் நிகழ்த்தி இருக்கிறார்.
ICYMI - WHAT. A. CATCH 😯😯
WOW. A one-handed stunner from @klrahul to end Usman Khawaja’s enterprising stay!#INDvAUSpic.twitter.com/ODnHQ2BPIK— BCCI (@BCCI) February 17, 2023
இந்தப் பட்டியலின் முதல் இடத்தில் 55 டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 2,500 ரன்கள் மற்றும் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக முன்னாள் இங்கிலாந்து ஜாம்பவான் வீரர் இயன் போத்தம் உள்ளார்.
சர்வதேச டெஸ்டில் அதிவேகமாக 2500 ரன்கள் மற்றும் 250 விக்கெட்டுகள் விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியல்:
இயன் போத்தம் - 55 டெஸ்ட்
ரவீந்திர ஜடேஜா - 62 டெஸ்ட்
இம்ரான் கான் - 64 டெஸ்ட்
கபில்தேவ் - 65 டெஸ்ட்
250 wickets and 2500 runs with the bat in test cricket for Ravindra Jadeja. What an impeccable player! @imjadeja#TeamIndia#INDvAUSpic.twitter.com/y8vganxeRb
— WhistlePodu Army ® - CSK Fan Club (@CSKFansOfficial) February 17, 2023
Milestone 🚨 - @imjadeja becomes the fastest Indian and second fastest in world cricket to 250 Test wickets and 2500 Test runs 🫡🫡#INDvAUSpic.twitter.com/FjpuOuFbOK
— BCCI (@BCCI) February 17, 2023
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும், 2வது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் ஜடேஜா. அத்துடன், தனது சிறப்பான பேட்டிங் திறனை வெளிப்படுத்திய அவர் அரைசதம் விளாசி 70 ரன்கள் எடுத்தார். இதனால், அந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த ஆட்டத்தில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிபிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.