Advertisment

'சீண்டிய இஷாந்த் சர்மா... கூல் டவுன் செய்த தோனி': மனம் திறந்த முன்னாள் பாக். வீரர்

இந்திய வீரர் இஷாந்த் ஷர்மா மற்றும் கவுதம் கம்பீருடன் நிகழந்த காரசாரமான வார்த்தைப் போர்களை நினைவு கூர்ந்துள்ளார் கம்ரான் அக்மல்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cricket, Kamran Akmal recalls 2012 episode during ind vs pak match Tamil News

Ishant Sharma and Kamran Akmal. (Screengrab/youtube)

Kamran Akmal on Ishant Sharma clash Tamil News: சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பரம போட்டியாளர்களாக உள்ளனர். இவ்விரு அணிகள் மோதும் ஆட்டம் என்றால் ரசிகர்கள் குஷியாகி விடுவார்கள். ஏனென்றால், இந்த அணிகள் விளையாடும் ஆட்டம் விறுவிறுப்புடன் கூடிய மோதல்களும் இருக்கும். களத்தில் இரு அணிகள் வீரர்கள் முட்டிக்கொள்ளும் மோதல்கள் சமீப காலமாக இல்லை என்றாலும், இதே 10 ஆண்டுகளுக்கு முன்னர், இரு அணியில் யாராவது ஒருவர் பஞ்சாயத்து வைத்து விடுவார்கள். அவர்களை சமாதானப்படுத்த கள நடுவரும் மற்ற வீரர்களும் வந்து குவிந்து விடுவார்கள். இப்படியாக பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

Advertisment

அந்த வகையில், அதில் ஒரு சில சம்பவத்தை முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கம்ரான் அக்மல் வெளிப்படுத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக, இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா மற்றும் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் ஆகியோருடன் நிகழந்த காரசாரமான வார்த்தைப் போர்களை நினைவு கூர்ந்துள்ளார்.

நாதிர் அலி பாட்காஸ்ட்’ என்ற யூடியூப் சேனலில் பேசிய அக்மல், தனக்கும் கவுதம் கம்பீருக்கும் இடையே 2009 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தை முதலில் நினைவுபடுத்தி, அது முற்றிலும் தவறான புரிதலால் நடந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

"அது முற்றிலும் தவறான புரிதல். அது 2009-ம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டி. சயீத் அஜ்மல் பந்துவீச்சில், நான் ஸ்டம்புக்கு பின்னால் இருந்து கேட்ச் பிடித்ததை அப்பீல் செய்தென். அதற்கு நாட் அவுட்டாக வழங்கப்பட்டது. அப்போது கம்பீர் சிரித்தவாறு ஏதோ சொன்னார். ஆனால் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் பற்றிய பரபரப்பினால்…அவர் எந்தவிதமான கசப்பான வார்த்தைகளையும் சொல்லவில்லை. நான் தவறு செய்யவில்லை என்று, அவர் தனக்குத்தானே சொன்னார், ஆனால் அது என்னை நோக்கி கூறப்பட்டதாக நான் உணர்ந்தேன்." என்று கூறினார்.

தொடர்ந்து, 2012 தொடரின் போது இஷாந்த் ஷர்மாவுடன் நடந்த மற்றொரு சம்பவம் பற்றி அக்மல் நினைவு கூர்ந்தார். இஷாந்த் தன்னை சீண்டியதாகவும், விஷயம் கை மீறுவதற்குள் தோனி வந்து கூல் செய்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

"இஷாந்த் ஷர்மா சீண்டினார். அதை அவர் ஏராளமாக திரும்பப் பெற்றுக்கொண்டார் . அணிக்கு கேப்டனாக இருந்த எம்.எஸ்.தோனி, அவ்வளவு நல்ல மனிதர். அவரும் சுரேஷ் ரெய்னாவும் வந்து பிரச்சனையை தீர்த்து வைத்தார்கள். இந்தியா தோல்வியை நெருங்கியது. எனவே, ஆட்டம் பரபரப்பாக இருந்தது. ஷோயப் மாலிக் மற்றும் முகமது ஹபீஸ் நன்றாக விளையாடியதால் அவர் கோபமடைந்தார்." என்று கூறினார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Gautam Gambhir Cricket Sports Ishant Sharma Ms Dhoni Suresh Raina Kamran Akmal India Vs Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment