NEP vs UAE Tamil News: 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடக்கிறது. இந்த தொடருக்கு இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில், இந்த தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிக்கு முன்னேற உள்ள அணிகளுக்கு லீக் போட்டிகள் நடந்து வருகிறது.
அந்த வகையில், இன்று நேபாளம் கிர்திபூர் திரிபுவன் பல்கலைக்கழக சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் நேபாளம் – ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் அணி முதலில் பேட்டிங் செய்து, 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 310 ரன்கள் குவித்தது.
ஐக்கிய அரபு அமீரகம் அணியில் அதிகபட்சமாக, சதம் விளாசிய ஆசிப் கான் 101 ரன்களும், அரைசதம் விளாசிய அரவிந்த் 94 ரன்களும், கேப்டன் முஹம்மது வசீம் 64 ரன்களும் எடுத்தனர். நேபாளம் அணி தரப்பில் அதிகபட்சமாக தீபேந்திர சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தற்போது 311 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை நேபாளம் அணி துரத்தி வருகிறது. அந்த அணி 34 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது.
ஹவுஸ்ஃபுல் ஆனா ஸ்டேடியம்… மரத்தில் ஏறி போட்டியை ரசித்த ரசிகர்கள்
இந்நிலையில், நேபாளம் - ஐக்கிய அரபு அமீரகம் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் தொடர் போட்டியை காண 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரசிகர்கள் கிர்திபூர் திரிபுவன் பல்கலைக்கழக ஸ்டேடியத்தில் குவிந்தனர். ஸ்டேடியத்தின் மொத்த கொள்ளவு 30 ஆயிரம் ஆகும். இதனால், டிக்கெட் கிடைக்காமல் தவித்த மற்ற ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே இருந்த மரங்களில் தொங்கியபடியும் பேருந்தின் மீது நின்றபடியும் போட்டியை கண்டு ரசித்தனர்.
கிரிக்கெட் ரசிகர்கள் கடல் அலை போல் திரண்டதால் மைதானமே திருவிழா கோலம் பூண்டுள்ளது. இப்போட்டியை காண குவிந்த ரசிகர்கள் எடுத்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.
30K fans singing the national anthem together is itself a vibe 🇳🇵❤️#NepvsUAE #CWCL2 pic.twitter.com/W7YnRsdkT2
— bipul bhattarai (@bipul_bhattrai) March 16, 2023
In future Nepal Cricket 🏏 >> Pakistan Cricket #NepvsUae #nepalcricket #ICC #CricketTwitter pic.twitter.com/1IGffmQ4ou
— . (@Virat__spare) March 16, 2023
Craze of Nepal Cricket early morning on a working day!!!!
with @aasmani_shikara @karkigaurav701 @prashant_prasar @stha_shreyas @SugamLamsal2 #NEPvsUAE @CricketNep@CricketBadge pic.twitter.com/yLgPokRAAJ— Kushal Neupane (@ksl_neupane17) March 16, 2023
Crazy crowd gathered in Nepal to watch their team play against the UAE.#ICC #nepalcricket #NEPVSUAE pic.twitter.com/5OCTyAKKCu
— Anand Sachan (@anand_sachan23) March 16, 2023
What a cricketing sight to behold? @ESPNcricinfo #NEPvsUAE pic.twitter.com/zpgI5vbse3
— Yunij Karki (@ikark_JinuY) March 16, 2023
50 ஓவர் உலகக் கோப்பை - தகுதி பெற்ற அணிகள்
ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை லீக் தொடர் போட்டியில் நமீபியா, நேபாளம், ஓமன், பப்புவா நியூ கினியா, ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய ஏழு அணிகள் விளையாடி வருகின்றன. இதில் ஸ்காட்லாந்து மற்றும் ஓமன் அணிகள் உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டிக்கு தகுதி பெற்று விட்டன.
நேபாளம் அணி உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் தனது இடத்தை உறுதிப்படுத்த அந்த அணிக்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே தேவை அதனால், இன்று நடைபெறும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டும். தற்போது நேபாளம் அணி புள்ளிப்பட்டியலில் 38 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.