Cricket news in tamil: ஹர்பஜன் மற்றும் அஸ்வின் பந்துகளை சந்தித்த ஒரு சில சர்வதேச கிரிக்கெட் வீரர்களில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் இயன் பெல்லும் ஒருவர். இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கின் பந்தை 2006, 2007, 2008, 2009, மற்றும் 2011 ஆண்டுகளில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டிகளில் சந்தித்தார். அதேசமயம் இங்கிலாந்தில் நடைபெற்ற பட்டோடி டெஸ்ட் கிரிக்கெட் கோப்பைக்கான 5 போட்டிகளில் 2ல் விளையாடிய இயன் பெல், சுழல் பந்து வீச்சாளர் அஸ்வினின் பந்துகளையும் சந்தித்திருந்தார்.
இங்கிலாந்தின் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான பெல், சமீபத்தில் ஈ.எஸ்.பி.என் நடத்திய 'ரன் ஆர்டர்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில், "இருவரையும் ஒப்பிடும் போது, அவர்கள் தனித்துவமான பண்புகளை கொண்டவர்களாக உள்ளனர். அதோடு அவர்களில் ஹர்பஜனின் பந்துகளை சொந்த மண்ணிலும், அயல் நாட்டிலும் ஒரு பேட்ஸ்மேனாக எதிர்கொண்ட போது மிகவும் கடினமாக இருந்ததது" என்று கூறியுள்ளார்.
மேலும் "ஹர்பஜன் வீசும் அவரது தூஸ்ராவுக்கு எதிராக பேட்டிங் செய்வது மிக கடினமான ஒன்று. என்னை பொறுத்தவரை இரு வீரர்களையும் அவர்களது சொந்த மண்ணில் சந்திப்பது சவால் நிறைந்தது. இங்கிலாந்தில் ஹர்பஜனுக்கு எதிராக நான் விளையாடிய போது அதிக ரன்கள் எடுக்க முடியும் என்று நினைத்தேன். ஆனால் அவரது பந்தில் அதிக வேகம் இருந்தது. பந்தின் பவுன்ஸ் சற்று நிலையானதாகவும், அதிக திருப்பம் இல்லதாகவும் இருந்தது" என்று கூறியுள்ளார்.
அஸ்வின் நிறைய யுத்திகளை கையாளக் கூடிய மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்றும், இவர்களில் ஹர்பஜனிடம் தான் அதிகம் சிரமப்பட்தாகவும் குறிப்பிட்டுள்ளார். அதோடு டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் தூஸ்ராவை பயன்படுத்தாமல் பந்து வீசும் பங்கு மற்றும் அவரின் பந்து வீசும் ஆங்கிள் கவரும் வகையில் உள்ளதாகவும் பெல் தெரிவித்துள்ளார்.
அஸ்வினுடன் ஒப்பிடும்போது ஹர்பஜன் வெளிநாட்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் முதல் ஹாட்ரிக் எடுத்த ஹர்பஜன் சிங் 152 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால் அஸ்வின் 123 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். வெளிநாடுகளில் பங்கேற்ற போட்டிகளில் குறைவான ஓவர்களை மட்டும் வீசியுள்ள அஸ்வின், அவருடைய பந்து வீச்சில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியுள்ளார். வெளிநாடுகளில் அவருடைய பந்து வீச்சில் நல்ல முன்னேற்றம் காட்டுவார் என்று பெல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
"அஸ்வின், டெஸ்ட் போட்டி அணியில் இன்னும் சில வருடங்கள் நீடிப்பார். எனவே அவருடைய பந்து வீச்சில் இன்னும் சிறப்பாக முன்னேற்றம் காட்டுவார். ஜிம்மி ஆண்டர்சன் வெளிநாடுகளில் விளையாடி வரும் போட்டிகளில் நல்ல முன்னேற்றம் பெற்றுள்ளார் என்பதை நம்மால் கண்கூடாக பார்க்க முடிகிறது. சொந்த மண்ணில் அவர் சிறப்பாக பந்து வீசக்கூடியவர், வெளிநாடுகளில் விளையாடிய அனுபவம் தற்போது அவருக்கு நன்றாகவே கைகொடுத்துள்ளது. அது போலவே அஸ்வினும், வெளிநாடுகளில் பங்கேற்கும் போட்டிகளில் சிறப்பான முன்னேற்றம் அடைவார்" என்று பெல் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.