Advertisment

பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியல்: டாப் லிஸ்டில் அஸ்வின், ரிஷப்; நடராஜனுக்கு இடமில்லை

BCCI announces annual player retainership 2020-21 - Team India Tamil News: இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அதன் வருடாந்திர வீரர்கள் ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் A+ பிரிவில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பீர்த் பும்ரா ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது.

author-image
WebDesk
Apr 15, 2021 22:36 IST
Cricket news in tamil: BCCI announces annual player retainership 2020-21 - Team India

Cricket news in tamil: இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அதன் வருடாந்திர வீரர்கள் ஒப்பந்த பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இந்தாண்டுக்கான ஒப்பந்த பட்டியலையும், வீரர்களின் சம்பள விபரங்களையும் வெளியிட்டுள்ளது. அதில் A+ பிரிவில் உள்ள கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பீர்த் பும்ரா ஆகியோருக்கு ரூ.7 கோடியும், A பிரிவில் உள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, சேடேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, ஷிகர் தவான், கே எல் ராகுல், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ரிஷாப் பந்த், மற்றும் ஹார்டிக் பாண்ட்யா ஆகியோருக்கு ரூ.5 கோடியும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

மேலும் ரூ.3 கோடி சம்பளமாக பெறும் B பிரிவில் விருத்திமான் சஹா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், ஷார்துல் தாக்கூர், மாயங்க் அகர்வால் ஆகியோரும், ரூ.1கோடி சம்பளமாக பெறும் C பிரிவில் குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, தீபக் சாஹர், சுப்மான் கில், ஹனுமா விஹாரி, ஆக்சர் படேல், ஸ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், மற்றும் முகமது சிராஜ் ஆகியோருக்கும் இடம் கிடைத்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " (https://t.me/ietamil)

#Cricket #Bcci #Sports #Indian Cricket #Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment