தென்னாப்பிரிக்காவில் கோவிட் மாறுபாடு: இந்தியா ‘ஏ’ அணியை வெளியேற்ற மறுக்கும் பிசிசிஐ!

Covid variant in South Africa: BCCI not pulling out India ‘A’ team Tamil News: தென்னாப்பிரிக்காவில் கோவிட் மாறுபாடு அச்சுறுத்தி வரும் நிலையில், அந்நாட்டில் விளையாடி வரும் இந்தியா ‘ஏ’ கிரிக்கெட் அணியின் சுற்றுப்பயணத்தை ரத்து செய்யவில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Cricket news in tamil: BCCI not pulling out India ‘A’ team from South Africa

Cricket news in tamil: சீனாவின் உகானில் இருந்து உலகெங்கும் பரவிய கொரோனா பெருந்தொற்று தற்போது மாறுபாடு அடைந்து 2ம் அலையை உருவாக்கி வருகிறது. இது தென்னாப்பிரிக்காவிலும் மாறுபாடு அடைந்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அந்நாட்டிற்கு சர்வதேச போட்டிகள் தொடர்பாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட அணிகள் தற்போது தங்கள் நாடு நோக்கி திரும்ம்பியுள்ளன. ஆனால், இந்தியா விளையாட்டுதுறை சார்பில் தற்போது வரை இது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.

நேற்று முன்தினம் மத்திய சுகாதார அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும், போட்ஸ்வானா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஹாங்காங் வழியாக வரும் சர்வதேச பயணிகள் இந்த நாடுகளில் பதிவான வைரஸின் புதிய மாறுபாட்டின் பல வழக்குகள் காரணமாக கடுமையான திரையிடல் மற்றும் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது.

ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் வருகிற டிசம்பர் 5-ம் தேதி முதல் தென்னாப்பிரிக்காவின் போட்செஃப்ஸ்ட்ரூமில் தொடங்க இருந்த நிலையில், இந்தியாவின் ஜூனியர் பெண்கள் ஹாக்கி அணியில் ஒரு சில வீராங்கனைகள் கடந்த சனிக்கிழமை அங்கு செல்லத் திட்டமிடப்பட்டது. ஆனால், வெள்ளிக்கிழமை மாலை சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு போட்டியை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தது.

தற்போது தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா ‘ஏ’ கிரிக்கெட் அணி 4 நாள் கொண்ட ஆட்டத்தில் விளையாடி வருகிறது. கொரோனா மாறுபாடு அச்சுறுத்தி வரும் நிலையில் அந்த அணியினரை அந்நாட்டில் இருந்து வெளியேற்றவில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

பிசிசிஐ இன்னும் ‘ஏ’ அணி சுற்றுப்பயணத்தை ரத்து செய்யவில்லை என்றும், அந்த அணிக்கு எந்த தொடர்பும் அனுப்பப்படவில்லை என்றும் தெரிகிறது. “எங்கள் எதிர்கால நடவடிக்கையை தீர்மானிக்கும் முன் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகத்திடம் இருந்து விவரங்களைப் பெற வேண்டும். இந்த பிரச்னையை நாங்கள் கண்காணித்து வருகிறோம்,” என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.

மேலும், பி.1.1529 என்ற வைரஸின் புதிய மாறுபாட்டைக் கண்டறிந்த அனைத்து மாநிலங்களுக்கும் சுகாதார அமைச்சகம் ஆலோசனை வழங்கியிருந்தாலும், “தீவிரமான பொது சுகாதார தாக்கங்களை” ஏற்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

தற்போது இந்திய மண்ணில் நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி, வருகிற டிசம்பர் 17-ம் தேதி முதல் தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

இந்த நேரத்தில், நிலைமை ஒரு இக்கட்டாக பார்க்கப்படுகிறது. இந்திய வீரர்களில் சிலருக்கு தொற்று பரவியதைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் மான்செஸ்டரில் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்டில் விளையாட இந்திய அணி மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cricket news in tamil bcci not pulling out india a team from south africa

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com