/tamil-ie/media/media_files/uploads/2021/10/Tamil-indian-express-2021-10-13T172309.657.jpg)
T20 World Cup Tamil News: இந்தியாவில் உருவெடுத்த கொரோனா 2 அலையின் அச்சத்தால் தற்காலிமாக நிறுத்தப்பட்ட 7-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் வரும் 17-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரை தொடர்ந்து இந்த தொடர் அரங்கேறுவதால் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2021/10/Tamil-indian-express-2021-10-13T174712.835.jpg)
இந்த தொடருக்கான புதிய ஜெர்ஸியை தொடரில் பங்கேற்கவுள்ள அணிகள் அறிமுகப்படுத்தி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய ஜெர்ஸியை இன்று அறிமுகம் செய்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ).
Presenting the Billion Cheers Jersey!
The patterns on the jersey are inspired by the billion cheers of the fans.
Get ready to #ShowYourGame@mpl_sport.
Buy your jersey now on https://t.co/u3GYA2wIg1#MPLSports#BillionCheersJerseypic.twitter.com/XWbZhgjBd2— BCCI (@BCCI) October 13, 2021
இந்த மாதம் 17-ந்தேதி தொடங்கும் உலகக்கோப்பை தொடர் நவம்பர் 14-ந்தேதியுடன் நிறைவடைகிறது. வருகிற 18ம் தேதி நடக்கும் இந்த தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் வருகிற 24-ம் தேதி நடைபெற இருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us