Cricket news in tamil: பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர். 2009ம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளில் களம் கண்ட இவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தோடு ஓய்வு பெற போவதாக அறிவித்தார். 36 டெஸ்ட் போட்டிகளில் 119 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள இவர், 61 ஒருநாள் போட்டிகளில் 81 விக்கெட்டுகளையும், 50 டி-20 போட்டிகளில் 59 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார்.
ஆடுகளத்தில் பந்துகளை மிக துல்லியமாக வீசி எதிரணியை மிரட்டும் வேகப்பந்து வீச்சாளர் அமீர், தான் பந்து வீச மிகவும் கடினப்பட்ட பேட்ஸ்மேன்கள் குறித்து பேசியுள்ளர். அதில் அவர் அதிகம் கடினப்பட்டது ஆஸ்திரேலிய நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் தான் என கூறியுள்ளார். மேலும் ரோகித் சர்மாவை விட இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு பந்து வீசுவது தான் மிகவும் சவாலான ஒன்று என்றும் தெரிவித்துள்ளார்.
"நான் பந்து வீச மிகவும் கடினப்பட்ட பேட்ஸ்மேன்களில் முதன்மையானவர் ஸ்டீவ் ஸ்மித், ஏனெனில் அவரது நுட்பம் மிகவும் வித்தியாசமானது. அவரது நிலைப்பாடு அவருக்கு எதிராக பந்து வீசுவதை கடினமாக்குகிறது. மேலும் பந்தை ஸ்டம்பிற்கு வெளியே விட்டுவிடுவதில் கை தேர்ந்தவர்.
கோலி ஏன் 'கிங் கோலி' என்று அழைக்கப்படுகிறார் என்பதை எல்லா வடிவங்களிலும் அவர் நிரூபித்துள்ளார். அவர் அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளில் மகிழ்விக்க விரும்புகிறார். நான் அவருக்கு பந்துவீசுவதையே விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
மேலும், ரோகித் மற்றும் கோலிக்கு எதிரான பந்துவீச்சு குறித்து பேசிய அமீர், இந்த இருவருக்கும் (கோலி மற்றும் ரோகித்) நான் ஒருபோதும் கடினமான பந்துவீச்சைக் கண்டதில்லை. ரோகித்துக்கு பந்து வீசுவது எனக்கு சுலபமாக இருக்கிறது. இரு வேறுபாடுகளுடன் கூடிய பந்து வீச்சால் அவரை வெளியேற்ற முடியும் என்று நான் நினைக்கிறேன். இடக்கை ஸ்விங் பந்துகளுக்கு ரோகித் ரொம்பவே சிரமப்படுவார். அதோடு அவரிடமிருந்து விலகி செல்லும் பந்துகளும் மிகவும் சிரமப்படுவார்.
ஆனால் விராட் கோலிக்கு பந்துவீசுவது சற்றே கடினமானது. ஏனெனில் அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளை அவர் நன்றாகவே கையாளுகிறார். மேலும் அழுத்தம் நிறைந்த போட்டிகளில் சிறப்பாகவும் விளையாடுகிறார்" என்று அமீர் குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)