India vs Sri Lanka, Jasprit Bumrah Tamil News: இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு மும்பையில் தொடங்குகிறது. இந்திய டி20 அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த டி20 தொடரில் மூத்த வீரர்கள் ரோகித், விராட், கே.எல்.ராகுல் ஆகியோர் இடம் பெறவில்லை. காயம் காரணமாக கடந்த டி20 உலக கோப்பையில் இருந்து ஒதுங்கி இருந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும் இந்திய டி20 அணியில் இடம் பெறவில்லை. இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஆட உள்ளது.
இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அணியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளார். இந்த தொடருக்கான அணியில் மூத்த வீரர்களான ரோகித், கோலி ஆகியோர் அணிக்கு திரும்புகின்றனர். அணியை ரோகித் வழிநடத்துகிறார். இந்த இரு தொடர்களுக்குமான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அப்போது அந்த அணியில் காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இடம் பெறவில்லை.
இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் இந்திய அணிக்குத் திரும்புவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
NEWS - The All-India Senior Selection Committee has included pacer Jasprit Bumrah in India’s ODI squad for the upcoming Mastercard 3-match ODI series against Sri Lanka.
More details here - https://t.co/hIoAKbDnLA #INDvSL #TeamIndia— BCCI (@BCCI) January 3, 2023
கடந்த ஆண்டு செப்டம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடருக்குப் பிறகு, தொடர்ச்சியான முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா டி 20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. அவர் பெங்களுருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வு பெற்று வந்தார். தற்போது அவர் உடற்தகுதியை எட்டியுள்ள நிலையில், விரைவில் இந்திய ஒருநாள் அணியில் சேர இருக்கிறார்.
கடந்த கோடையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு இந்திய சுற்றுப்பயணத்தின் போது காயத்தை எதிர்கொண்டார் மற்றும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் விளையாடாமல் இருந்தார்.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணைகேப்டன்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.