cricket news in tamil: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது . இதில் சென்னையில் நடந்த முதல் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றது. இந்நிலையில் இந்த அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி வரும் 13 தேதி நடைபெற உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை சேப்பாக்கில் சிவப்பு மண்ணால் பன்படுத்தப்பட்ட 2வது ஆடுகளத்தில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. ஆனால் வரும் சனிக்கிழமையன்று தொடங்கவுள்ள 2வது டெஸ்ட் போட்டியின் ஆடுகளம் களி மண்ணால் பன்படுத்தப்பட்ட 5வது ஆடுகளத்தில் நடக்க உள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய (டி.என்.சி.ஏ) அதிகாரி தெரிவித்துள்ளார்.
"முதல் இரண்டு நாட்களில், ஆடுகளம் எங்களுக்கும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் உதவவில்லை. நாங்கள் ஒரு சாலையில் விளையாடியது போல் உணர்ந்தோம்”என்று முதல் டெஸ்டில் நான்காவது நாள் ஆட்டத்தின் முடிவில் ஒளிபரப்பாளரிடம் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா கூறி இருந்தார்.
வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா கூறியது போலவே, சிவப்பு மண் பன்படுத்தப்பட்ட 2வது ஆடுகளத்தில் இந்திய பந்து வீச்சாளர்களால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடிக்க வைக்க முடியவில்லை. அதே வேளையில் இஷாந்த் சர்மா வீசிய பந்துகளில் ஆடிய கேப்டன் ஜோ ரூட் மற்றும் சிபிளி அடித்த பந்துகள் பீல்டர் கையில் சரியாக சிக்கவில்லை. ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த ரோகித் சர்மா விக்கெட் கீப்பர் அருகில் நகர்ந்தும் பந்து சரியாக கேரி ஆகவில்லை. ஆனால் தொடரின் தொடக்க ஆட்டக் காரர்களாக இறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் ரன்களை ஈசியாக குவித்தனர். 2வது போட்டியிலும் ஆடுகளம் முதல் போட்டியைப் போலவே செயல்படுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.
களி மண்ணால் அமைக்கப்பட்டுள்ள ஆடுகளம் சுழற் பந்து வீச்சாளர்கள் வீசும் பந்து நன்றாக பவுன்ஸ் ஆவதற்கான சாத்தியம் அதிகம் எனக் கூறப்படுகிறது. அதே வேளையில் பந்து டேர்ன் ஆவதற்கான வாய்ப்புகள் குறைவு எனக் கூறுகிறார்கள்.
களி மண் / சிவப்பு மண்
பி.சி.சி.ஐ.யில் பணியாற்றிய மூத்த கியூரேட்டர் ஒருவரிடம் இந்த இரு மண்களின் வித்தியாசம் பற்றி கேட்டபோது,"சிவப்பு மண் துகள்களின் பிணைப்பு வலிமை, கருப்பு அல்லது களிமண் பிணைப்பு வலிமை விட அதிகமாக உள்ளது. இதுவே சிவப்பு மண் வேகமாக சிதைவதற்கான காரணமாக அமைகிறது. அதனால் சிவப்பு மண் மேல்புறங்களைக் கொண்ட ஆடுகளங்கள் (பிட்சுகள்) விரைவாக மோசமடைகின்றன, ”என்று கூறியுள்ளார்.
முதல் டெஸ்டில் 2வது இன்னிங்சில் இங்கிலாந்தின் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வீசிய பந்துகளும், இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச் ரோகித் சர்மாவுக்கு வீசிய பந்துகளும் விளையாட்டு முன்னேறும்போது முதல் டெஸ்டுக்கான ஆடுகளம் எவ்வாறு மாறியது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
இது பற்றி பிசிசிஐ-யின் முன்னாள் தலைமைக் கண்காணிப்பாளர் டால்ஜித் சிங் கூறுகையில், கருப்பு / களிமண் மண் மேல்புறங்களைக் கொண்டு ரேங்க் டர்னர்களை உருவாக்குவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. புல்லை முழுவதுமாக கட் செய்ய வேண்டும். அதோடு அவற்றை மிகவும் உலர வைக்க நீங்கள் தூரிகையைப் பயன்படுத்தினால், அது ஒரு குறைவான மேற்பரப்பாக இருக்க வாய்ப்புள்ளது. நீங்கள் இன்னும் கருப்பு மண்ணுடன் ஒரு டர்னரைத் தயாரிக்கலாம், ஆனால் அதற்கு மிகச்சிறந்த கண்காணிப்பாளர் தேவை என்று கூறியுள்ளார்.
சேப்பாக்க மைதானத்தில் உள்ள சதுக்கத்தில் எட்டு பிட்சுகள் உள்ளன. அதில் ஒன்று மட்டும் தான் சிவப்பு மண். மற்றவைகள் களிமண் மற்றும் சிவப்பு மண் கொண்ட மேற்புறத்தைதோடு காணப்படுகின்றன. இந்த ஆடுகளங்களை தயாரிப்பதற்கு பொறுப்பாளராக வி. ரமேஷ் குமார் என்பவர் இருக்கிறார்.
மைதானத்தின் முந்தய பதிவுகள்
சேப்பாக்கம் மைதானத்தை பொறுத்தவரை, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சிறந்த மைத்தனங்களுள் ஒன்றாக பார்க்கப்படுகிறது. 2016 ஆம்
ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக இங்கு நடைபெற்ற 5 வது போட்டியின் இறுதி நாளில் இந்தியா வென்றது.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 477 ரன்கள் எடுத்து இருந்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 759/9 எடுத்து இருந்தது. இந்த போட்டியில் கருண் நாயர் 303 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கமால் இருந்தார். இரண்டாவது இன்னிங்சில் கூட, இங்கிலாந்து 88 ஓவர்கள் பேட் செய்தது, இருப்பினும் அந்த அணி இன்னிங்ஸ் தோல்வி பெற்றது.
கொரோனா கட்டுப்பாடுகள்
பிப்ரவரி 15 ம் தேதி தொடங்கவுள்ள 2 வது டெஸ்டுக்கு 14,000 ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர் என்று தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய டிஎன்சிஏ செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி தெரிவித்தார். மொபைல் போன்களைத் தவிர வேறு எதையும் அரங்கத்திற்குள் கொண்டு செல்ல அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
மேலும் அரங்கத்திற்கு 17 நுழைவாயில்கள் உள்ளன. வெப்பநிலையை சரிபார்க்கவும், எல்லோரும் முகமூடி அணிந்திருப்பதை உறுதிசெய்யவும், கை சுத்திகரிப்பு மருந்துகள் கிடைக்கும். அனைத்து வாயில்களும் முறையாக நிர்வகிக்கப்படும். இரண்டு பார்வையாளர்களுக்கு இடையில் குறைந்தபட்சம் ஒரு இருக்கையாவது இருக்கக்கூடிய வகையில் இருக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவ கியோஸ்க்கள் தரையைச் சுற்றி இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவருடன் கூடிய ஒரு மருத்துவ அறை எப்போதும் தயாரக இருக்கும். வெப்பநிலை அல்லது வேறு ஏதேனும் அறிகுறிகளுடன் யாராவது கண்டறியப்பட்டால், அவர்களை தனிமைப்படுத்த தனிமைப்படுத்தும் அறை உள்ளது. உயிர் தடுப்பு பாதுகாப்பு முறை முற்றிலுமாக அமலில் இருக்கும் ”என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.
டி.என்.சி.ஏ ஒன்பது ப்ளாக்கிற்கு டிக்கெட்டுகளை விற்றுள்ளது. டிக்கெட் விலை ஒரு நாளைக்கு ரூ .100 முதல் ரூ .450 வரை நிணயிக்கப்பட்டுள்ளது. பதாகைகள், பலகைகள் மற்றும் பிற பொருட்களை மைதானத்திற்குள் எடுத்துச் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இப்படி கூறி இருப்பது, விவசாயிகளின் போராட்டத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்பதை . டி.என்.சி.ஏ அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.