/tamil-ie/media/media_files/uploads/2021/02/ind-vs-eng-bfjb.jpg)
Cricket news in tamil: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றுள்ளது. இங்கிலாந்து அணியின் இந்த வெற்றி இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏன்னென்றால் இந்திய அணியின் சொந்த மண்ணிலே இங்கிலாந்து அணி தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. அதோடு இந்த வெற்றி அந்த அணிக்கு மேலும் உற்சாகத்தை தந்துள்ளது. எனவே வரும் பிப்ரவரி 13 முதல் சென்னையில் நடக்கும்2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் சார்பில் களமிறங்கும் வீரர்களில் சில மாற்றங்களை கொண்டு வரக்கூடும் என எதிர்பார்க்கலாம்.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா, சுப்மன் கில் ஜோடி இரண்டு இன்னிங்ஸிலும் சிறப்பான தொடக்கத்தை தரவில்லை. அதிலும் அணியின் முன்னணி வீரர் ரோகித் சர்மா சொற்ப ரன்களில் வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். முன்னணி வீரர் என்பதால் அடுத்த போட்டியில் கழட்டி விடுவதற்கு வாய்ப்புகள் சற்று குறைவாக தான் உள்ளது. இருந்தாலும் அந்த இடத்தில் மயங் அகர்வாலுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என சிலர் கூறுகின்றனர். அதே வேளையில் அவருடன் களமிறங்கிய சுப்மன் கில் (29 & 50) அணிக்கு ஒரு நல்ல துவக்கம் கொடுத்து, நல்ல ரன்களை சேர்த்திருந்தார். எனவே சுப்மன் கில்லுக்கு அடுத்தடுத்த போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கும்.
முதல் டெஸ்டில் சேடேஷ்வர் புஜாரா மற்றும் கேப்டன் விராட் கோலி அதிக ரன்களை சேர்த்தனர். எனவே இந்த இரு வீரர்களும் 3 மற்றும் 4 வது இடத்தில் இறங்கினால் அதிக ரன்கள் சேர்க்க வாய்ப்புகள் அமையும். ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பெற இந்திய அணியை வழி நடத்திய அஜிங்க்யா ரஹானே, நேற்றைய ஆட்டத்தில் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். எனவே ரஹானேவின் இடத்தில் கே.எல். ராகுலை கேப்டன் கோலி பரிசீலிக்க வாய்ப்புள்ளது.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷாப் பந்த் முதல் இன்னிங்சில் 91 பந்துகளில் 88 ரன்கள் என அதிரடி காட்டினார். அதே போல சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தரும் முதல் இன்னிங்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். எனவே இந்த இரு இளம் வீரர்களுக்கும் அடுத்த போட்டியில் இடம் கிடைப்பதில் சந்தேகம் இல்லை. சுழற் பந்து வீச்சாளர் அஸ்வினின் பந்து வீச்சு, முதல் இன்னிங்சில் எடுபடவில்லை என்றாலும், 2வது இன்னிங்சில் இங்கிலாந்து வீரர்களை ஒரு மிரட்டு மிரட்டி விட்டார். சிறப்பான பந்து வீச்சில் 2வது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றிய அஸ்வின், 2 வது டெஸ்டிலும் இந்திய அணிக்கு வலு சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சுழற் பந்து வீச்சாளர் நதீம் பந்து வீச்சு 2 இன்னிங்ஸிலும் எடுபடவில்லை. எனவே அவர்க்கு பதில் குல்தீப் யாதவ் அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது.
வேகப்பந்து வீச்சை பொறுத்தவரை இஷாந்த் சர்மா மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா அற்புதமாகவே பந்து வீசினர். எனவே வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சில போட்டிகள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளார்.
2வது டெஸ்டில் இந்திய அணி சார்பாக விளையாட கணிக்கப்பட்ட லெவன்:
ரோஹித் சர்மா, சுப்மான் கில், சேடேஷ்வர் புஜாரா, விராட் கோஹ்லி (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே (துணைக்கேப்டன்), ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.