டி சில்வா vs டா சில்வா… ‘நீ என்னை கேட்ச் பிடித்தாய், அதனால் உன்னை…’ வைரல் வீடியோ!

Dhananjaya de Silva and Joshua Da Silva have been involved in an interesting battle video goes viral viral Tamil News: டெஸ்ட் தொடரில் இலங்கை வீரர் டி சில்வா வெஸ்ட் இண்டீஸ் வீரர் டா சில்வாவுக்கு இடையிலான சண்டை சுவாரஷ்யத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.

Cricket news in tamil: De Silva vs Da Silva battle video goes viral

West Indies tour of Sri Lanka Tamil News: இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி (மேற்கிந்திய தீவுகள்) 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்டில் 187 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், தற்போது இவ்விரு அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

கடந்த திங்கள் கிழமை (நவம்பர் 29ம் தேதி) முதல் நடைபெற்று வரும் இந்த டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 253 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனாது.

பின்னர் தொடர்ந்து 2ம் இன்னிங்சில் களமிறங்கியுள்ள இலங்கை அணி 4ம் நாள் ஆட்ட நேரத்தில் மதிய உணவு இடைவேளையோடு 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்து 102 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

டி சில்வா vs டா சில்வா

இந்த தொடரில் இலங்கை ஆல்ரவுண்டர் வீரர் தனஞ்சய டி சில்வா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் வீரர் ஜோசுவா டா சில்வா ஆகிய இருவருக்கும் இடையிலான சண்டை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சுவாரஷ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் காலியில் நடைபெற்ற முதல் டெஸ்டில், இலங்கை வீரர் லசித் எம்புல்தெனிய பந்தில் முதல் ஸ்லிப்பில் டி சில்வாவிடம் கேட்ச் கொடுத்து 54 ரன்களில் ஆட்டமிழந்தார் டா சில்வா.

இந்நிலையில், தற்போது நடக்கும் 2வது டெஸ்டில், வெஸ்ட் இண்டீஸ் வீரர் வீராச்சாமி பெருமாள் வீசிய பந்தை விரட்ட முயன்ற டி சில்வாவை விக்கெட் கீப்பர் வீரர் டா சில்வா கேட்ச் பிடித்து ஆட்டமிழக்க செய்தார்.

பின்னர் டா சில்வா வேடிக்கையாக ஸ்டம்ப் மைக்கில், “நீ என்னை கேட்ச் பிடித்தாய். அதனால் நான் உன்னை கேட்ச் பிடிக்கிறேன். கிரிக்கெட்டில் இப்படி தான் நடக்கும்” என்று கூறினார்.

வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் வீரர் ஜோசுவா டா சில்வா
இலங்கை ஆல்ரவுண்டர் வீரர் தனஞ்சய டி சில்வா

இதைக் கவனித்த வர்ணனையாளர்கள் ஒளிபரப்பின் போது, “இந்தத் தொடர் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. டி சில்வாவுக்கும் டா சில்வாவுக்கும் இடையில் நடக்கும் ஒரு வகையான போட்டியாகவே இது இருக்கிறது. அது மிகவும் சுவாரஸ்யமானது. இலங்கை வீரர் டி சில்வா வெஸ்ட் இண்டீஸ் வீரர் டா சில்வாவுக்கு செய்த செய்முறையை, டா சில்வா திருப்பி செய்திருகிறார்.” என்று கூறினார்கள்

கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த வீடியோ தற்போது அதிகம் பகிரப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cricket news in tamil de silva vs da silva battle video goes viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com