Cricket news in tamil: இந்த மாதத்தில் இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்றது. இதில் குஜராத்தின் அகமதாபாத்தில் நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றி, வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட் வாஷ் செய்தது.
இதனைத்தொடர்ந்து, கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் பங்கேற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா அணிக்கு சாவல் அளிக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த தொடரிலும் இந்தியா அந்த அணியை ஒயிட் வாஷ் செய்தது. இதன்மூலம் இந்திய அணி ஐசிசியின் டி20 தரவரிசை பட்டியில் 6 வருடங்களுக்கு பிறகு முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
𝐓𝐇𝐀𝐓. 𝐖𝐈𝐍𝐍𝐈𝐍𝐆. 𝐅𝐄𝐄𝐋𝐈𝐍𝐆 ☺️ ☺️
What a performance this has been by the @ImRo45 -led #TeamIndia to complete the T20I series sweep! 🏆 👏#INDvWI | @Paytm pic.twitter.com/L04JzVL5Sm— BCCI (@BCCI) February 20, 2022
🏆🇮🇳 pic.twitter.com/rYZsp15n5t
— Yuzvendra Chahal (@yuzi_chahal) February 20, 2022
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணி அண்டை நாடான இலங்கையுடன் 3 போட்டிகள் டி20 தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடர்களுக்காக இலங்கை அணி இந்திய வந்துள்ளது. டி20 தொடருக்கான முதலாவது போட்டி லக்னோவில் நாளை வியாழக்கிழமை மாலை தொடங்குகிறது.
தீபக் சாஹர் - சூர்யகுமார் நீக்கம்
இந்நிலையில், இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், மற்றும் மிடில்-ஆடர் வீரர் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் அணியில் நீக்கப்பட்டுள்ளார். இந்த இரு வீரர்களுக்கும் கொல்கத்தாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் காயம் ஏற்பட்டு இருந்ததாகவும், இதனால் தான் அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஃபீல்டிங் முயற்சியின் போது சூர்யகுமார் யாதவ் சிறிய காயம் ஏற்பட்டது. இதேபோல் பந்துவீச்சின் போது தீபக் சாஹருக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் இப்போது தங்கள் காயங்களை மேலும் நிர்வகிப்பதற்காக பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்குச் செல்வார்கள்" என பிசிசிஐ அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
சாஹரின் மெடிக்கல் ரிப்போர்ட் என்ன சொல்கிறது?
இந்திய அணியில் பந்துவீச்சு ஆல்ரவுண்டராக வலம் வரும் தீபக் சாஹர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தார். அவர் வீசிய 11 பந்துகளில் கைல் மேயர்ஸ் மற்றும் ஷாய் ஹோப் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ஆனால், அவருக்கு வலது தொடை தசையில் ஏற்பட்ட காயத்தால் அவர் தனது 2வது ஓவரை முடிக்க முடியாமல் மைதானத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த காயம் காரணமாக தான் அவர் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் குணமடைய குறைந்தது 4 முதல் 5 வாரம் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாஹர் ஐபிஎல் 2022 தொடரில் பங்கேற்க வாய்ப்புள்ளதா?
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன், தீபக் சாஹருக்கு ஏற்பட்டுள்ள காயம் குணமடைந்து முழு உடல் தகுதியை பெற்றுவிடுவார் என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், தீபக் சாஹரின் காயம் "மோசமாகத் தெரிகிறது" என்றும், காயம் காரணமாக அவர் ஐபிஎல் இருந்தும் வெளியேறலாம் (ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 14 கோடிக்கு வாங்கப்பட்டார்) என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
பயத்தில் சி.எஸ்.கே அணி
இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில், ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அங்கமாக இருந்த தீபக் சாஹருக்காக ரூ.14 கோடி வரை செலவு செய்திருந்தது சி.எஸ்.கே அணி. மேலும், அவரை அணியில் எடுப்பதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) ஆகிய அணிகளுடன் தீவிர ஏலப் போரில் ஈடுபட்டும் இருந்தது. இப்படி மிகவும் கடினப்பட்டு திரும்ப அணியில் சேர்க்கப்பட்ட அவருக்கு தற்போது காயம் ஏற்பட்டு இருப்பது சிஎஸ்கே நிர்வாகத்தில் ஒரு வித கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்களில் தீபக் சாஹர் இரண்டாவது வீரராகவும், ஒரு அணியால் அதிக விலை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர்களில் முதலாவது வீரராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.