Cricket news in tamil: இந்திய பண்டிகைகளுள் ஒன்றான 'ஹோலி' பாண்டிகையை, நேற்று பலர் விமரிசையாக கொண்டாடினர். இருப்பினும், கொரோனா தொற்று குறித்த அச்சம் இன்னும் தொற்றியுள்ளதால், சிலர் கடந்த ஆண்டுகளில் 'ஹோலி' பண்டிகை கொண்டாடிய புகைப்படங்ககளை இணையத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டனர்.
அந்த வகையில் விளையாட்டு தொகுப்பாளர் கௌதம் பீமானி, ஹோலி கொண்டாட்டத்தில் ஒரு பாகிஸ்தான் வீரரை நோக்கி வண்ணப்பொடிகளை வீசுவது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டதோடு, பாகிஸ்தான் வீரர் ஒருவரோடு நிற்கும் புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
My favourite cricketing #Holi memory! The Indian and Pakistani teams playing Holi in the pool of @TajWestEnd Also the first time I met @wasimakramlive #INDvsENG #indvpak #HappyHoli pic.twitter.com/waXU7DjrIO
— Gautam Bhimani (@gbhimani) March 28, 2021
அவர் பதிவிட்ட இந்த புகைப்படங்கள் 1897 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அணி இந்தியவிற்கு சுற்றுப்பயணம் வந்தபோது எடுக்கப்பட்டது ஆகும். அப்போது இரு அணி வீரர்களும் தங்கியிருந்த மும்பை தாஜ் ஓட்டலில், ஹோலி பண்டிகையை ஜாலியாக கொண்டாடியுள்ளனர். அவர் பதிவிட்ட மற்றோரு புகைப்படத்தில் மெலிந்த, இளம் கிரிக்கெட் வீரராக இருப்பவர் தான் பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் வீரர் வாசிம் அக்ரம். 'இங்கு தான் நான் பாகிஸ்தான் ஜாம்பவான் வீரர் வாசிம் அக்ரமை முதல் முறையாக சந்தித்தேன்', என்று பீமானி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவிற்கு கமெண்ட் பதிவு செய்த பாகிஸ்தான் ஜாம்பவான் வீரர் வாசிம் அக்ரம், "ஹோலி பண்டிகை நல்வாழ்த்துக்கள், அது ஒரு கனாக்காலம் (வாட் அ டே 87 டூர்)" என்றுள்ளார்.
Happy Holi . What a day that was 87 tour of india. https://t.co/IV8QsP0Yko
— Wasim Akram (@wasimakramlive) March 28, 2021
தற்போது இந்தியா - பாகிஸ்தான் நாடுகள், இரு நாடுகளின் உறவுகள் மேம்பட வேண்டும் என விரும்புகின்றன. இதற்காக இருநாட்டு பிரதமர்களும் தொடர்ந்து பேச்சு வார்த்தையையும் நடத்தி வருகின்றனர். எனவே இரு நாட்டு கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் நடக்க வாய்ப்புகள் அமையும் என நம்பிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் இரு அணிகளும் டி-20 தொடர் ஒன்றில் பங்கேற்று விளையாடுவது குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்று வருதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான் ஜாம்பவான் வீரர் வாசிம் அக்ரமைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் சிலர் தங்கள் மலரும் ஹோலி பண்டிகை கொண்டாட்ட புகைப்படங்ககளை பதிவிட்டும், ஹோலி பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்தும் வருகின்றனர்.
Happy Holi. pic.twitter.com/Tu2slnLEDJ
— Ramiz Raja (@iramizraja) March 28, 2021
A very happy holi to all those celebrating,stay safe!
— zainab abbas (@ZAbbasOfficial) March 29, 2021
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " ( https://t.me/ietamil )
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.