Advertisment

'ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் இந்த 2 வீரர்களை அணியில் சேர்க்கலாம்' - ஜாம்பவான் வீரர் கவாஸ்கர்

Former Indian cricketer Sunil Gavaskar names 2 players who can take Hardik Pandya's place Tamil News: ஆல்-ரவுண்டர் வீரர் ஹர்திக் பாண்டியா மோசமான பார்ம்மில் உள்ள நிலையில் அவருக்கு பதில் 2 வீரர்களை பரிந்துரை செய்துள்ளார் இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர்.

author-image
WebDesk
New Update
Cricket news in tamil: Gavaskar names 2 players who can take Hardik Pandya's place

Cricket news in tamil: இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்-ரவுண்டர் வீரராக வலம் வருபவர் ஹர்திக் பாண்டியா. இவர் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வந்தார். எனவே இதற்காக லண்டன் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார் பாண்டியா. அதன் பிறகு இவர் களம் கண்ட போட்டிகளில் பெரிதாக சோபிக்கவில்லை. தவிர இவர் கலந்து கொண்ட போட்டிகளில் பந்தும் வீசவில்லை.

Advertisment
publive-image

இருப்பினும் இவரின் அதிரடியில் நம்பிக்கை வைத்த ஐபிஎல் தொடருக்கான மும்பை அணி நடப்பாண்டில் நடத்த போட்டிகளில் களமிறங்கியது. மேலும், பாண்டியா மீண்டும் அவரது பார்ம்மிற்கு திரும்புவார் என அவரது திறமை மீது நம்பிக்கை வைத்துள்ள இந்திய அணி அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

publive-image

தற்போது இலங்கை சென்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில் ஆல்-ரவுண்டராக இடம் பெற்றுள்ள ஹர்டிக் பண்டியா, நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இருப்பினும், டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை நடந்த முதல் டி20 போட்டியில் மீண்டும் தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

publive-image

பந்து வீச முடியாமலும், பேட்டிங்கில் பார்ம்க்கு திரும்பி வர முடியாமலும் தவித்து வரும் ஹர்திக் பாண்டியா குறித்து இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் கூறுகையில், "பாண்டியாவிற்கு பதிலாக நாம் மாற்று வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஒரு வீரரை மட்டும் எப்போதும் உற்றுநோக்கி கொண்டிருக்கிறோம். அவருக்கே தொடர்ச்சியான வாய்ப்புகளை கொடுத்து இருக்கின்றோம். அந்த வீரர் படுமோசமாக செயல்படும்போது அவருக்கு பதிலாக மற்ற வீரர்களை முயற்சி செய்வது நல்லது. மீண்டும் மீண்டும் ஒருவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருவது தவறானது.

publive-image

ஹார்டிக் பாண்டியாவிற்கு பதிலாக கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே நாம் மாற்று வீரரை தயார் படுத்தவில்லை. தீபக் சாஹர் இலங்கை தொடரில் சிறப்பாக விளையாடி உள்ளார் அவரால் பேட்டிங் செய்ய முடிகிறது. அதேபோன்று புவனேஸ்வர் குமார் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 அரை சதங்களை விளாசி இருக்கிறார். எனவே பாண்டியாவிற்க்கு பதிலாக தற்போது மாற்று வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை நாம் தான் கண்டுபிடிக்க வேண்டும்." என்று கூறியுள்ளார்.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil

Sunil Gavaskar Ind Vs Sl India Vs Srilanka Indian Cricket Hardik Pandya India Shikhar Dhawan Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment