சென்னையில் 2-வது டெஸ்ட்: ஆன்லைனில் டிக்கெட் ‘புக்’ செய்வது எப்படி

India vs England 2nd test match ticket sale details: டெஸ்ட் போட்டியைக் காண டிக்கெட் முன் பதிவு செய்ய நீங்கள் அணுக வேண்டிய இணைய பக்கம்.

Cricket news in Tamil How to Buy Tickets Online For 2nd Test at Chepauk- Price, Sales, Online Buy and more details

Cricket news in Tamil: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 578 ரன்களுடன் இங்கிலாந்து அணிஆல்-அவுட் ஆனது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 337 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் பின் 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்களைச் சேர்த்துள்ளது, 2வது இன்னிங்ஸில் தற்போது விளையாடி வரும் இந்திய அணி 1 விக்கெட்யை இழந்து 31 ரன்களுடன் ஆடி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையே நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியும் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்திலே நடைபெற உள்ளது. பிப்ரவரி 13 முதல் 17 வரை நடக்கவுள்ள இந்த போட்டியைக் காண, ரசிகர்களுக்கு பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று அச்சம் சென்னையில் இன்னும் நீடித்து வருவதால், ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் போட்டியைக் காண விரும்பும் ரசிகர்கள் டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளாலாம். அதோடு சுமார் 15,000 டிக்கெட்டுகள் விற்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

டெஸ்ட் போட்டியைக் காண டிக்கெட் முன் பதிவு செய்ய நீங்கள் அணுக வேண்டிய இணைய பக்கம். (www.paytm.com & http://www.insider.in). இன்று முதல் இந்த இணைய பக்கங்களை பயன்படுத்தி போட்டியைக் காண டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தினசரி டிக்கெட் விலை: ‘சி, டி, இ’ லோயர் – ரூ. 100 / -, ‘டி, இ’ அப்பர் – ரூ. 150 / -, ‘எஃப், எச், ஐ, ஜே, கே’ லோயர் – ரூ. 150 / – ‘நான், ஜே, கே’ மேல் – ரூ. 200 / –

முன்பதிவு செய்த டிக்கெட்களை ஆன்லைன் கேன்சல் செய்ய பிப்ரவரி 11-ம் தேதி காலை 10.00 மணி முதல் விக்டோரியா ஹாஸ்டல் சாலையில் அமைந்துள்ள பூத் எண் 3 இல் டிக்கெட்டுகளை கேன்சல் செய்யலாம். வாரும்போது கண்டிப்பாக மாஸ்க் (முகமூடி) அணிந்திருக்க வேண்டும். மற்றும் அங்கு சமூக இடைவெளியைக் கடை பிடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cricket news in tamil how to buy tickets online for 2nd test at chepauk price sales online buy and more details

Next Story
ஸ்டெம்பிங் மிஸ் செய்த பண்ட் : அதிருப்தியில் அஸ்வின், ஆதரவு தெரிவித்த பயிற்சியாளர்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express