Cricket news in tamil: இந்தியாவிற்கு சுற்றுப்பயணமாக வந்துள்ள இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-3 என்று தோல்வியை தழுவியது. இந்த தொடரில் பங்கேற்று விளையாடிய இங்கிலாந்தின் ஆல்-ரவுண்டர் வீரர் பென் ஸ்டோக்ஸ் தனக்கு 5 கிலோ எடை குறைந்துள்ளதாகவும், இதற்கு தொடரின் கடைசி போட்டிக்கு முன்பாக ஏற்பட்ட வயிற்று வலியே காரணம் என்றும் கூறியுள்ளார்.
"இந்திய சூழ்நிலைகளில் விளையாடுவது மிக கடினமாகவே இருந்தது. இருபினும் எங்களை அணி வீரர்கள் முழு ஆற்றலோடு விளையாடினார்கள். குறிப்பாக கடந்த வாரம் விளையாடிய போட்டியின் போது 41 டிகிரிக்கு மேல் வெப்பம் இருந்தது. இதனால் எங்களில் சிலர் அவதிக்குள்ளானோம். அதோடு நான் 5 கிலோ எடையும், டோம் சிபிலி 4 கிலோ எடையும், மற்றும் ஜிம்மி ஆண்டர்சன் 3 கிலோ எடையும் இழந்தனர். எங்கள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச் பந்து வீச்சுக்கிடையில் கழிப்பறையில் அதிக நேரம் செலவிட்டார்.
இது எந்த வகையிலும் ஒரு தவிர்க்க முடியாத ஒன்று. ஏனென்றால் அணியில் எல்லோரும் விளையாடத் தயாராக இருந்தனர். இந்திய அணியின் ரிஷப் பந்த் சிறப்பாக ஆடினார். அவருடைய சிறப்பான ஆட்டத்திற்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்” என்று ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.
டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தின் செய்லபாடு குறித்து முன்னாள் வீரர்கள் பலர் நிறைய குறைபாடுகளை தெரிவித்திருந்தனர். அதைபற்றியெல்லாம் கவலை கொள்ளக்கூடாது என்றும் கடந்த காலத்தை மறந்து விட்டு எதிர்காலத்தில் கவனம் செலுத்துவது முக்கியம் என்று ஸ்டோக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
"அனுபவம் வாய்ந்த முன்னாள் வீரர்களின் வேலை இது, அது நல்லது. ஆனால் அவர்கள் எங்களை சிறந்த வீரர்களாகவும், சிறந்த அணியாக மாற்றுவது நல்லதல்ல. அது எங்களின் வேலை. மற்றும் அணியின் கேப்டன், பயிற்சியாளர்கள் மற்றும் அணியில் உங்களோடு விளையாடும் வீரர்கள் ஆகியோரின் கருத்துக்கள் தான் உண்மையிலேயே முக்கியமானவை. அவர்கள் நம்முடன் இணைந்து ஒரு அணியை உருவாக்க முயற்சிக்கிறார்கள். நீங்கள் ஏமாற்றத்தை மேம்படுத்துவதற்கு, உங்களை நீங்களே முடிந்தவரை ஊக்குவிக்க வேண்டும்" என்று ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்
நாளை மறுநாள் மார்ச் - 12 முதல் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் தொடங்க உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil